»   »  குடும்ப பிரச்சனையை தீர்க்கப் போய் சர்ச்சையில் சிக்கிய கீதா, ஊர்வசி

குடும்ப பிரச்சனையை தீர்க்கப் போய் சர்ச்சையில் சிக்கிய கீதா, ஊர்வசி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்க நடத்தப்படும் டிவி நிகழ்ச்சிகளால் நடிகைகள் கீதா மற்றும் ஊர்வசி ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் டிவி நிகழ்ச்சிகள் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இந்த குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை சீனியர் நடிகைகள் நடத்தி வருகிறார்கள்.

சன் டிவியில் வரும் நிஜங்கள் பஞ்சாயத்து நிகழ்ச்சியை குஷ்பு நடத்துகிறார்.

கீதா

கீதா

ஜீ தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் வரும் பதுக்கு ஜதகா பன்டி என்ற குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காணும் நிகழ்ச்சியை நடிகை கீதா நடத்தி வருகிறார்.

ஓரினச்சேர்க்கையாளர்கள்

ஓரினச்சேர்க்கையாளர்கள்

கீதா தனது நிகழ்ச்சிக்கு வந்த ஓரினச்சேர்க்கையாளர்களை திட்டினார். இளம்பெண்ணை பார்த்து நீ எப்படி செக்ஸ் வச்சுக்குவ என கேட்டு சர்ச்சையில் சிக்கினார்.

ஊர்வசி

ஊர்வசி

நடிகை ஊர்வசி மலையாள டிவி சேனல் ஒன்றில் குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நிகழ்ச்சிக்கு அவர் குடிபோதையில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

ஊர்வசி குடிபோதையில் வருவதுடன் தனது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாக கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆணையமும் ஊர்வசியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
Actresses Urvashi and Geetha landed in trouble as they anchor programmes to solve marital issues between couples.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil