கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால், டிவி நடிகர் சரமாரியாக வெட்டிக் கொலை.. 'நண்பர்' கைது!

By

சென்னை: கள்ளத் தொடர்பை கைவிடாததால் டிவி நடிகரை வெட்டி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை அகதி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Thenmozhi BA சீரியல் நடிகர் படுகொலை காரணம் என்ன? | Oneindia Tamil

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர், செல்வரத்தினம். வயது 45. இலங்கையைச் சேர்ந்த இவர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் மெயின் வில்லனாக நடித்து வந்தார்.

அகதிகள் முகாம்

அகதிகள் முகாம்

மேலும் சில தொடர்களில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக விருதுநகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மனைவி மற்றும் குழந்தைகளை தங்க வைத்தார். அவர்கள் அங்கு வசிக்கின்றனர். செல்வரத்தினம் மட்டும், எம்.ஜி.ஆர் நகரில் தங்கியிருந்து டிவி தொடரில் நடித்து வந்துள்ளார்.

சரமாரியாக வெட்டு

சரமாரியாக வெட்டு

இந்நிலையில், நேற்றுமுன் தினம் அதிகாலை தனது வீட்டின் அருகே, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த நான்கு பேர், செல்வரத்தினத்தை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் செல்வரத்தினம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

பெண் ஒருவருடன்

பெண் ஒருவருடன்


அதற்குள் வெட்டியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். செல்வரத்தினம் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, செல்வரத்தினம், விருதுநகர் அகதிமுகாமில் உள்ள பெண் ஒருவருடன் அடிக்கடி பேசியதை வைத்து விசாரணை நடத்தினர்.

பெண்ணின் கணவர்

பெண்ணின் கணவர்

அந்தப் பெண்ணின் கணவர்தான் நண்பர்களுடன் சேர்ந்து செல்வரத்தினத்தை கொலை செய்தது உறுதியானது. தனிப்படை போலீசார் அந்தப் பெண்ணின் கணவர் விஜயகுமார் (38) என்பவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

அடிக்கடி தகராறு

அடிக்கடி தகராறு

விருதுநகர் அகதிகள் முகாமில் செல்வரத்தினம் வீட்டின் அருகே அவர் நண்பர் விஜயகுமார் வசிக்கிறார். அவர் மனைவி டயானாவுடன் செல்வரத்தினத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதை விஜயகுமார் பலமுறை கண்டித்தும் கள்ளத் தொடர்பை கைவிடவில்லை.

மனைவிக்கு தெரியாமல்

மனைவிக்கு தெரியாமல்

தீபாவளி அன்று விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக விஜயகுமாரிடம் கூறிவிட்டு செல்வரத்தினத்தை பார்க்க சென்னைக்கு டயானா வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தனது மனைவிக்கு தெரியாமல் சென்னை வந்துள்ளார். இரவு முழுவதும் செல்வரத்தினத்தின் வீட்டின் அருகே காத்திருந்து அதிகாலையில் நண்பர்களுடன் சேர்ந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X