twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிவி சீரியல்கள் நீதிமன்ற நடைமுறைகளை அபத்தமாக காட்டுவதை தவிர்க்க வேண்டும்..வழக்கறிஞர் என்.ரமேஷ் பேட்டி

    |

    சீரியல்கள், சினிமாக்களில் காட்டப்படும் அபத்தக்காட்சிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வழக்கறிஞரிட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்.

    சினிமாவில், சீரியலில் காட்டப்படுவதுபோல் அபத்தமான கோர்ட் காட்சிகள் நிஜ நீதிமன்றத்தில் கிடையவே கிடையாது என்கிறார் வழக்கறிஞர் என்.ரமேஷ்

    நீதிபதி கையில் மரச்சுத்தி, பின்னால் தண்டம் வைத்த காவலாளி எல்லாம் சினிமாவில் மட்டுமே உள்ளது, நிஜ நீதிமன்றத்தில்லை இவைகள் இல்லை என்று மறுக்கிறார் வழக்கறிஞர் ரமேஷ்.

    சீரியல்கள், சினிமாக்களில் காட்டப்படும் அபத்தக்காட்சிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வழக்கறிஞரிட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வழக்கறிஜர் என்.ரமேஷ் அளித்த பதில்.

    காற்றாலையில் சிக்கிக் கொண்ட பரத், வாணிபோஜன்… அடுத்தது என்ன?: நெஞ்சை உறைய வைக்கும் மிரள் டீசர் காற்றாலையில் சிக்கிக் கொண்ட பரத், வாணிபோஜன்… அடுத்தது என்ன?: நெஞ்சை உறைய வைக்கும் மிரள் டீசர்

     சினிமாவில் நீதிபதிகள் கையில் சுத்தி வைத்து ஆர்டர் ஆர்டர் என சொல்கிறார்களே அது நிஜமா?

    சினிமாவில் நீதிபதிகள் கையில் சுத்தி வைத்து ஆர்டர் ஆர்டர் என சொல்கிறார்களே அது நிஜமா?

    சினிமாக்களில் ஆரம்பத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து அபத்தமான காட்சிகள் வைக்கப்பட்டது. நீதிபதி கையில் மரச்சுத்தியை வைத்துக்கொண்டு அங்கே உள்ள மரப்பலகையில் தட்டி 'ஆர்டர் ஆர்டர்' என்று சொல்லுவார். இப்படிப்பட்ட நடைமுறை எந்த நீதிமன்றத்திலும் இல்லை. இரண்டாவது நீதிபதிக்கு பின்னால் தண்டத்தை கையில் பிடித்தப்படி ஆர்டர்லி போல் ஒரு உதவியாளர் நிற்பது போன்ற காட்சி இருக்கும். அப்படி எந்த நீதிமன்றத்திலும் எந்த நீதிபதிகளுக்கு பின்னாலும் யாரும் நிற்பதில்லை. ஆனால் சினிமாவில் இது போன்ற காட்சிகளை தொடர்ச்சியாக வைத்து பொதுமக்களை நீதிமன்றம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நம்ப வைத்துள்ளார்கள்.

     நீதிமன்றத்தில் மை லார்டு என்று சீரியல் நாயகி சுற்றி சுற்றி வாதிடுகிறாரே நீண்ட வாதத்துக்கு வாய்ப்புண்டா?

    நீதிமன்றத்தில் மை லார்டு என்று சீரியல் நாயகி சுற்றி சுற்றி வாதிடுகிறாரே நீண்ட வாதத்துக்கு வாய்ப்புண்டா?

    நீதிமன்றத்தில் யார் வேண்டுமானாலும் பேசலாம், வளவளவென்று வாதங்கள் நடக்கும், நீதிபதி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பார் என்று காட்சிகளை வைத்து அப்படித்தான் இருக்கும்போல என நினைத்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு பொதுமக்கள் வருகிறார்கள். நாங்கள் அவர்களிடம் சொல்வது "நீதிமன்றத்தின் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமானது, வளவளவென்று பேசுவதையும் நீண்ட வாதங்களையும் எந்த நீதிமன்றமும் அனுமதிப்பது இல்லை. எது தேவையோ அதற்கான பதிலை மட்டும் கூற வேண்டும். ஆகவே நீங்கள் சினிமாவில் பார்ப்பது போல் நினைத்துக் கொண்டு இங்கு வராதீர்கள்" என்று சொல்லுவோம்.

     கணவனை காப்பாற்ற நாயகி கடுமையாக வாதாடுகிறாரே? வழக்கறிஞர் அல்லாத ஒருவர் வாதாட முடியுமா?

    கணவனை காப்பாற்ற நாயகி கடுமையாக வாதாடுகிறாரே? வழக்கறிஞர் அல்லாத ஒருவர் வாதாட முடியுமா?

    இதுபோன்று சினிமாக்களில் காட்டப்படும் அப்பத்தமான காட்சிகளை சரி போனால் போகிறது என்று விட்டுவிட்டு அவரவர் நகர்ந்ததன் விளைவு சீரியல்கள் வரை இதுபோன்ற அபத்தமான காட்சிகள் பரவுகிறது. மேலும் மேலும் அபத்தங்களுடைய உச்சமாக செல்வதை பார்க்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட இந்த சீரியலில் வருவது போல் எந்த கோர்ட்டிலும் நடக்காது. வழக்கறிஞர் என்று ஒருவரை சொல்வதற்கு காரணம் அவர் பார் கவுன்சில் மூலம் பதிவு செய்து மற்றவருடைய பிரச்சனைக்காக வழக்காட அனுமதி பெற்றவர் என்று அர்த்தம். நீதிமன்றத்தில் உங்களுக்காக சொந்தமாக நீங்கள் வாதாட சட்டத்தில் அனுமதி உண்டு. ஆனால் அடுத்தவருக்காக வழக்கறிஞர் மட்டுமே வாதிட முடியும் என்பதே. குறிப்பிட்ட அந்த சீரியலில் கணவனுக்காக மனைவி, அதுவும் வழக்கறிஞராக இல்லாத ஒரு பெண் வாதாடுவதாக காண்பிப்பது அபத்தத்திலும் அபத்தம். இதை சட்டம் அனுமதிக்காது.

    போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருவதற்கும் அமர்வதற்கும் நடைமுறை என்ன?

    போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருவதற்கும் அமர்வதற்கும் நடைமுறை என்ன?

    சாட்சி கூண்டில் ஏறும் விசாரணை அதிகாரி சீருடையில், கிராஸ் பெல்ட் அணிந்து தான் நீதிபதி முன் நிற்க வேண்டும். சிவில் உடையில் வர முடியாது. வழக்கறிஞர்கள் அமரும் டேபிளில் போலீஸ் அதிகாரிகள் அமர்வது கீழமை நீதிமன்றங்களில் சில இடங்களில் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் செசன்ஸ் கோர்ட் அல்லது உயர் நீதிமன்றத்தில் இதுபோன்று அமர்வதில்லை. அதிகாரிகளும் வழக்கு விசாரணையில் வந்து அமர்ந்து கவனிக்கும் நடைமுறை எதுவும் கிடையாது. விசாரணை அதிகாரி மட்டும் தான் ஆஜராவார்.

    நீதிபதி மட்டுமே ஜாமீன் தரமுடியும்-வழக்கறிஞர் ரமேஷ்

    நீதிபதி மட்டுமே ஜாமீன் தரமுடியும்-வழக்கறிஞர் ரமேஷ்

    நீதிபதி வழக்கை விசாரித்து இன்றைய விசாரணை முடிந்து விட்டது என்று எழுந்துச் சென்றால் அத்துடன் கோர்ட் நடவடிக்கை முடிந்துவிடுகிறது. அதன்பின் குற்றவாளிக்கு ஜாமீன் கொடுப்பது சாத்தியமல்ல. நீதிபதி தான் ஜாமினை வழங்க முடியும். அந்தக்காட்சியில் நீதிபதி விசாரணை முடிந்தது என்று ஜாமீன் தராமல் சென்றுவிட்டப்பின் எப்படி ஜாமீனில் வெளியே வருகிறார் கணவர்? அதற்கு சாத்தியமே இல்லை. இந்த சீரியலில் நீதிபதி எழுந்து போன பிறகு கண்டிஷன் பெயில் கிடைத்ததாக காட்டுவது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும்.

    சீரியல் இயக்குநர்கள், கதாசிரியர்கள் இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    சீரியல் இயக்குநர்கள், கதாசிரியர்கள் இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    பொது மக்களுக்கு சரியான விஷயங்களை தர வேண்டும் என்பதே இங்கு குறிப்பிட விரும்புவது. ஏனென்றால் இது போன்ற செயல்களை பார்க்கும் பொதுமக்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் என்றால் இதுதான் என்று புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அது பற்றி உரிய ஞானத்துடன் சீரியல் இயக்குனர்கள், கதாசிரியர்கள் காட்சிகளை அமைக்க வேண்டும். இதற்கு அதிகம் மெனக்கிட வேண்டாம். யாராவது ஒரு வழக்கறிஞர் அல்லது நீதிமன்ற நடவடிக்கை சம்பந்தப்பட்ட யாராவது ஒருவரிடம் காட்சிகள் குறித்து ஆலோசனை பெற்று காட்சிகளை அமைக்கலாம். இது போன்ற தொடர்ச்சியான தவறான அபத்தமான காட்சிகளை அமைப்பதினால் சீரியல்களை தொடர்ச்சியாக பார்க்கும் இல்லத்தரசிகள், இளம் தலைமுறையினர் அவர்களுடைய புரிதல் தவறாக போக வாய்ப்புள்ளது ஆகவே இதை ஆரம்பத்திலேயே தடுப்பது நல்லது" என்று தெரிவித்தார்.

    English summary
    His answer to the questions asked to the lawyer to make people aware about the ridiculous shown in serials and cinemas. Lawyer N. Ramesh says that ridiculous court scenes as shown in movies and serials are never available in real courts. he denies that the wood hammer on the judge's hand and the office assistant with a Scepter behind him is only in the cinema and not in the real court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X