twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் முழு ஊரடங்கு.. வரும் 19 ஆம் தேதி முதல், சின்னத்திரை படப்பிடிப்பு ரத்து..பெப்சி அறிக்கை!

    By
    |

    சென்னை: ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதாக பெப்சி தெரிவித்துள்ளது.

    கொரோனா, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து இருக்கிறது.

    இதைத் தடுக்க ஊரடங்கை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு நிபுணர் குழு கடந்த சில நாட்களுக்கு முன் அளித்தது.

    சியான் 60.. இதுதான் டைட்டிலா.. வெளியான அந்த தகவல்.. ரசிகர்கள் மத்தியில் எழுந்த குழப்பம்?சியான் 60.. இதுதான் டைட்டிலா.. வெளியான அந்த தகவல்.. ரசிகர்கள் மத்தியில் எழுந்த குழப்பம்?

     முழு ஊரடங்கு

    முழு ஊரடங்கு

    இதையடுத்து தமிழக அரசு, கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க, சென்னையில் வரும் 19- ஆம் தேதி முதல், 30 ஆம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கை மீண்டும் பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் இந்த முழு ஊரடங்கு பொருந்தும். இதனால் சென்னையில் நடைபெற்று வந்த சுமார் 34 சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது.

     பெப்சி அறிக்கை

    பெப்சி அறிக்கை

    சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நிறுத்தப்படுகின்றன. இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) அறிக்கை வெளியிட்டுள்ளது. தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் சுவாமிநாதன் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்

     வேண்டுகோள்

    வேண்டுகோள்

    அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை உணர்ந்து அவர்களையும் திரைப்பட தொழிலாளர்களோடு ஒன்றிணைத்து, கருணையோடு மூன்றாவது முறையாக நிவாரணம் அளித்த முதல்வருக்கு நன்றி. திரைப்படத் துறையினருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுமாறு பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளோம்.

     மத்திய அரசு

    மத்திய அரசு

    கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டெழ, ரூ.20 லட்சம் கோடியை மத்திய அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது. அதில் திரைப்படத்துறைக்கோ, தொழிலாளர்களுக்கோ எந்த தொகையும் அறிவிக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம். மத்திய அரசு எவ்வித நிவாரணமும் அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. திரைத்துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Tv shooting and cinema post production work will halt from June 19 to 30th: Fefsi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X