»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தொலைக்காட்சி நடிக, நடிகையர்களுக்காகத் தொடங்கப்பட்ட சங்கத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தொடங்கி வைத்தார்.

தமிழக தொலைக்காட்சி ரேடியோ நடிகர்கள் யூனியன் என்ற பெயரில் 1994 ம் வருடம் ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக "வாத்தியார்ராமனும், செயலாளராக எஸ்.வி.சேகரும் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறியதாவது:

டிவி நடிகர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த சங்கம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இதை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் பலர்இறங்கினர். அதன் விளைவாக இந்தச் சங்கம் மீண்டும் தொடங்கப்பட்டது.

சினிமாத்துறையில் பிரச்சனை ஏற்படும் நேரத்தில் டிவி தொடர் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது. வேலை நிறுத்தம் செய்யாமல் சுமூகமாக நடந்துபிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம். நலிவுற்ற கலைஞர்களுக்கு மத்திய அரசின் பென்ஷன் போன்ற சலுகைகளைப் பெற்றுத் தருவோம்.

இந்த நோக்கங்களுக்காக இந்தச் சங்கம் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டு உள்ளது என்று எஸ்.வி.சேகர் கூறினார்.

எஸ்.வி.சேகரின் நாடக விழா வரும் 26 ம் தேதி தொடங்கி 1 ம் தேதி வரை 8 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. பிரியாவிஷன் சார்பில் சென்னை காமராஜர்அரங்கில் யாமிருக்க பயமேன், பெரியப்பா, காதுல பூ, அல்வா, எல்லாமே தமாஷ்தான், பெரியப்பா, அதிர்ஷ்டக்காரன் ஆகிய நாடகங்கள்நடத்தப்படுகின்றன.

1 ம் தேதி நடத்தப்படும் பெரியப்பா நாடகம் சேகர் நடிக்கும் 4001 வது நாடகம் ஆகும். இதையொட்டி எஸ்.வி.சேகருக்குப் பாராட்டு விழா நடக்கிறது.இதில் டைரக்டர் ஷங்கர், வைரமுத்து, சோ, சுஜாதா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

டி.வி. நடிகர் சங்கத் தொடக்க விழாவில் 300 நடிகர்கள் கலந்து கொண்டனர். ஒரு ஆண்டு காலத்துக்கு வாத்தியார் ராமனும், எஸ்.வி.சேகரும் பொறுப்பில்நீடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Read more about: actor, association, chennai, drama, tv
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil