»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை சாலிகிராமம் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக டி.வி. நடிகைகள் நிஷா மற்றும் சிந்து ஆகியோர்கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் "சந்தோஷமாக" இருந்த சினிமா இயக்குநர் ரமேஷ் ராஜாவும் கைதுசெய்யப்பட்டார்.

டி.வி. மற்றும் சினிமா நடிகைகள் சமீப காலத்தில் அதிக அளவில் விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்டிருக்கின்றனர். பிரபல நடிகையான மாதுரியின் கைதுக்குப் பின்னர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பல டி.வி.மற்றும் சினிமா நடிகைகள் கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசித்தனர்.

ஆனால் டி.வி. நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட பின்னர் மேலும் சில நடிகைகள் தொடர்ந்து ரகசியமாகவிபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சந்தேகத்திற்கு இடமான நடிகைகளைப்போலீஸார் படு ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் விபச்சாரம் தொடர்ந்து நடப்பதாகவும், பலநடிகைகள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸாருக்குத் தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்துசென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயக்குமார் உத்தரவின் பேரில், பெண் போலீஸார் உதவியுடன் போலீஸ்படை களத்தில் இறங்கியது.

நடிகை சிந்து விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சாலிகிராமத்தில் உள்ளபாஸ்கரா காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு மாறுவேடத்தில் போலீஸார் சென்றனர்.

வீட்டுக்கு வெளியே சிந்துவின் தங்கை சத்யா காவலுக்கு இருந்தார். அவரிடம் "கஸ்டமர்கள்" போல நடித்துஏமாற்றிய போலீஸார் திடீரென்று அந்த வீட்டுக்குள் புகுந்து சிந்துவையும், சத்யாவையும் அதிரடியாகக் கைதுசெய்தனர்.

அப்போது சிந்துவுடன் "சந்தோஷமாக" இருந்தவர் சினிமா இயக்குநர் ரமேஷ் ராஜா என்பதும் தெரிய வந்தது.இவர் "சப்தம்" உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் சன் டி.வியில் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் "ஜனனி" என்ற தொடரில் நடிகை சிந்து நடித்துள்ளார்.

இதற்கிடையே மற்றொரு வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் இன்னொரு டி.வி. நடிகையான நிஷா கைதுசெய்யப்பட்டார். இவர் நடிகை ராதிகாவின் "சித்தி" தொடரில் அவரது மகளாக நடித்துள்ளார்.

இது தவிர தற்போது ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் "வீட்டுக்கு வீடு லூட்டி" என்ற தொடரிலும் நடித்துவருகிறார். ஏற்கனவே ஒருமுறை இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைதானவர் இவர். எட்டு கன்னடப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதில் பல படங்கள் "ஏ" ரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்கத்தாவைச் சேர்ந்த நிஷா டி.வி. சீரியல்களில் மூலம் கிடைக்கும் பணம் போதுமானதாக இல்லை என்பதால்விபச்சாரத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,000 வாங்குவதாகவும் அவர்தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சிந்து, நிஷா, சத்யா மற்றும் ரமேஷ் ராஜா ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.

பெண் புரோக்கர் கைது:

இதற்கிடையே ஆந்திராவிலிருந்து சென்னைக்கு இளம் பெண்களைக் கடத்தி, அவர்களை விபச்சாரத்திற்காக விற்றுவந்த ஒரு பெண் புரோக்கரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த லதா என்ற இந்த பெண் புரேக்கர், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 100 பெண்களைசென்னைக்குக் கடத்தி வந்து, விபச்சாரத்திற்காக விற்றுள்ளாள்.

அவளுடன் வந்த சுனிதா என்ற 20 வயதுப் பெண், லட்சுமி என்ற 18 வயதுப் பெண் மற்றும் அவர்களை ரயில்மூலம் கடத்தி வந்த ரத்தினம்மாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கோர்ட்டுக்கு வந்த புவனேஸ்வரி:

இந் நிலையில் விபச்சார வழக்கில் பிடிபட்டு ஜாமீனில் இருக்கும் சினிமா, டிவி நடிகையான புவனேஸ்வரி இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்து குற்றப்பத்திரிக்கையை வாங்கிக் கொண்டார்.

கடந்த சிலமுறை நீதிமன்றத்துக்கு வரச் சொல்லியும் சூட்டிங் என்று சொல்லி வராமல் இருந்தார், ஆனால், இன்று வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம்இருந்ததால் சுடிதார் துப்பட்டாவால் முகத்தை முழுமையாக மூடியபடி சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு காரில் வந்தார்.

விறுவிறுவெனச் சென்று குற்றப் பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு உடனே காரில் தாவிப் பறந்துவிட்டார்.

கடந்த முறை நீதிமன்றத்திற்கு பர்தா அணிந்து வந்தார் புவனேஸ்வர். இதற்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மீண்டும் பர்தாஅணிந்து வந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தது.

இதனால்,நேற்று நீதிமன்றம் வந்தபோது, முகத்தை தனது சுடிதார் துப்பட்டாவால் மூடிக்கொண்டு வந்து சென்றார் புவன்ஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil