»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் தயாரிப்பாளர்கள் சார்பில் தொடங்கப்படும் தமிழத் திரை டிவியை இந்தியா மட்டுமல்லாது 36 நாடுகளில்காணும் வகையில் விவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருட்டு விசிடி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் புதுப்படங்களைத் திரையிடுவதால் வெள்ளித்திரைக்குபெரும் நஷ்டம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், தமிழ் திரை என்ற புதிய தொலைக்காட்சியைத்தொடங்குகிறார்கள் தமிழ் திரைப்படத் தயாப்பாளர்கள்.

கேபிள் டிவி ஆபரேட்டர்களுடன் இணைந்து இந்த சாட்டிலைட் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படுகிறது.

தமிழ் திரை என்று பெயடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சியை இயக்குவதற்கு வசதியாக, தமிழ் பொழுதுபோக்குகலை நிறுவனம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக தயாரிப்பாளர் கோவைத் தம்பியும்,நிர்வாக இயக்குனராக ஆர்.கே.செல்வமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 14ம் தேதி தமிழ் திரை டிவி தொடங்கப்படுகிறது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி முதல் சோதனைஒளிபரப்பு தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் 15ம் தேதி (அண்ணா பிறந்த நாள்) முதல் அதிகாரப்பூர்வ ஒளிபரப்புதொடங்கும்.

தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் புதுப்படங்கள் இனிமேல், அதே நாளில் தமிழ் திரை டிவியில் ஒளிபரப்பாகும்.இதன் மூலம் திருட்டு விசிடிக்களின் தாக்கம் குறையும் என தயாரிப்பாளர்ள் நம்புகின்றனர். மேலும் நடிகர்-நடிகைகளின் விரிவான பேட்டிகள் பல திரைத் தகவல்களை பொதுமக்களை நேரடியாகச் சென்றடைவும் வசதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரை கட்டண சேனலாக (பே சானல்) இயங்கவுள்ளது. இந்தியா மட்டுமல்லாது 36 நாடுகளில் தெரியும்வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை திரையுலகின் தேவைக்குப்பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

வட்டியில்லாத கடனாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கவும் திட்டம் உள்ளது. இந்த டிவியின் ஓராண்டுவருமானத்தை வைத்து வருடத்துக்கு 100 படங்கள் தயாரிக்க முடியுமாம்.

தமிழ் திரை டிவியை நிர்வகிக்க பல்வேறு கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிரியேட்டிவ் கமிட்டியில்பாரதிராஜா, மணிரத்தினம், ஷங்கர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆய்வுக் கமிட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.பி.செளத்ரி ஆகியோரும், மார்க்கெட்டிங் கமிட்டியில் கோவைத்தம்பி, குட்டிபத்மினி, ஹேம்நாக் பாபுஜி ஆகியோரும்,

ஆலோசனைக் கமிட்டியில் கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன், இப்ராகிம் ராவுத்தர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இந்த முயற்சியை பாராட்டியதுடன், தங்களது முழுமையானஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெவித்துள்ளதாக தமிழ் திரை நிறுவனம் கூறுகிறது.

எப்படியோ, உலகத் தமிழர்ககுக்கு இன்னொரு பொழுதுபோக்கு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil