தமிழ்நாடே கதறுது.. பத்திரிகையாளார்களைச் சந்திக்காமல் சென்ற விஜய்.. எக்ஸ் தளத்தில் வேதனை!
கரூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 குழந்தைகளும் அடங்குவர். மேலும் பலர் வாய் திறக்காமல் உள்ளனர். இப்படி இருக்கும்போது இந்த துய்ர சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் இரங்கலையும் வருத்தத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். திரையுலகில் பலரும் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் திருச்சி விமான நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். இது பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. விஜய் பத்திரிகையாளரளைச் சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதேநேரத்தில் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











