Jana Nayagan Audio Launch: ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்.. தேதி குறிச்சாச்சு.. இனி சரவெடிதான்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தை கர்நாடக திரையுலகைச் சேர்ந்த கே.வி. என் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சரியாக ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. அந்த வகையில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய விஜய், இது தொடர்பான அறிவிப்பின் போதே சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனால் ஜனநாயகன் இவரது கடைசி படமாக மாறியது. இப்படி இருக்கும்போது இந்த ஜனநாயகன் படத்திற்காக விஜய் ரூபாய் 200 கோடிகளில் இருந்து ரூபாய் 225 கோடிகள் வரை சம்பளமாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இவருடன் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்கிறார்கள்.

அடுத்த அப்டேட்: படத்தின் முதல் அறிவிப்பு வந்த போது படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்தால் அது விஜய்க்கு அரசியல் ரீதியாகவும் கைகொடுக்கும் என்ற காரணத்திற்காக படத்தின் ரிலீஸை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாற்றினர். இப்படி இருக்கும்போது படத்தின் சில போஸ்டர்கள், ஒரு கிளிம்ஸ் வீடியோ படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டது.
இசை வெளியீட்டு விழா: இப்படி இருக்கும்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்துவதற்கு பதிலாக மலேசியாவில் நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளது என்ற தகவல் வெளியானது. இப்படி இருக்கும்போது, படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் திரைத்துறையில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் இந்த தகவலை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

டிரைலர் ரிலீஸ்: மேலும் தமிழ்நாட்டில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தினால் தமிழ்நாடு ரசிகர்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. டிசம்பர் கடைசியில் இசை வெளியீட்டு விழா என்றால், புத்தாண்டுக்கு படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கணக்கு போட்டு வருகிறார்கள். விஜய் தற்போது தனது கட்சியின் பிரச்சாரத்தில் மிகவும் பிசியாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











