TVK Vijay: கேட்கல.. கேட்கல.. கத்தி கத்தி பேசும் விஜய்.. ஆனால் ஒன்னுமே கேட்கல.. என்ன பிரச்னை?
சென்னை: நடிகர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று அதாவது செப்டம்பர் 13 ஆம் தேதியில் இருந்து தொடங்கிவிட்டார். முதலில் திருச்சியில் இருந்து தொடங்கிய அவரது பரப்புரை காலை 10.35 மணிக்கு திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் மரக்கடை பகுதிக்கு வரவே 5 மணி நேரத்திற்கு மேலானது. இப்படி இருக்கையில் அவர் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்துடன் பேசத் தொடங்கினார். ஆனால் தொழில்நுட்பக் காரணம் காரணமாக விஜய் பேசியது கேட்கவில்லை. உடனே விஜய் ரசிகர்கள் கேட்கவில்லை கேட்கவில்லை என்று கத்தினர்.

இதனால் உடனே மைக்கை மாற்றினார். ஆனாலும் அவர் பேசியது பெரிய அளவில் பலருக்கும் கேட்கவில்லை. ஆனால் அவரது பேச்சு என்பது ஆளும் திமுக மற்றும் அதன் அமைச்சர்கள் என அவர்களை டார்கெட் செய்து பேசினார். இதை பார்க்கும்போது விஜய் கத்தி கத்தி பேசியும் தொண்டர்களுக்கு அவர் பேசியது கேட்கவில்லையே என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவர் பேசுகையில் சொன்னதை நிறைவேற்றாத திமுகவுக்கா 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் உங்கள் வாக்கு என்று கேள்வி எழுப்ப, அவரது தொண்டர்கள் இல்லை இல்லை என்று கத்துகிறார்கள்:.
விஜய்யின் இன்றைய பேச்சானது அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் சரியாக கேடகவில்லை என்றாலும் அவரது பேச்சு ஆளும் திமுகவை எதிர்த்துதான் இருந்தது என்பதால் ரசிகர்கள் பலரும் ஆரவாரம் செய்து கொண்டுதான் இருந்தார்கள். மேலும் திருச்சி திருப்பு முனையை ஏற்படுத்தும் மண். அதனால்தான் உங்களை எல்லாம் சந்தித்துவிட்டுப் போகலாம் என்று அவர் பேசுகையில் அங்கு கூடியிருந்த அவரது கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். அண்ணா முதன் முதலில் தேர்தலில் பேட்டியிட்டது திருச்சியில் தான், எம்.ஜி.ஆர் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தியது திருச்சியில்தான். அப்படியான வரலாற்றைக் கொண்ட திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கலாம் என்று இங்கு வந்துள்ளேன் என்று பேசினார். இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











