ஆனந்த யாழ் கண்ணீருடன் மீட்டுகிறதே: ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர்
சென்னை: பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியை ரசிகர்கள் ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
41 வயதே ஆன தேசிய விருது பெற்ற பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவால் திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அவரின் ரசிகர்கள் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இசை உலகில்
#ripnamuthukumar #NaMuthukumar உனது பயணம்
மண்ணுலகில் முடிந்தது...
இசை உலகில்
நீர் தந்த வரிகள்
என்றும் எங்களோடு தொடரும்...
யாருமில்லையோ
இந்த நாள் விடியாமலே போயிருக்கலாம்....
எமனுக்கு நல்ல கவிதை தர அங்கு யாருமில்லையோ...
பாட்டு
மூனு நிமிடம் பாட்டு மூவாயிரம் ஆண்டுக்கு குழந்தைகளுக்கு அப்பா அம்மா பாசத்த புரிய வைக்கிற அளவுக்கு எழுதிட்டாரு மனுசன் 😢#NaMuthukumar #RIP
நண்பன்
நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா !!!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா !!!#NaMuthukumar
சொர்க்கம்
சொர்க்கத்தில் பாட்டேழுத
ஆள் இல்லை போலும்
உன்னையும் அழைத்து கொண்டான் அந்த இரக்கமற்ற இறைவன்#NaMuthukumar
கவிதை
படித்துக்கொண்டிருக்கும் போதே இறைவனால் கிழிக்கப்பட்ட கவிதை#நாகூர் கவி#NaMuthukumar
சுவாசம்
உன்னாலே என்னாலும் தமிழ் ஜீவன் வாழுமே
சொல்லாமல் உன் சுவாசம் இயற்கையில் கலந்ததே RIP #NaMuthukumar Sir!
ஆனந்த யாழ்
ஆனந்த யாழ்
கண்ணீருடன் மீட்டுகிறதே #NaMuthukumar
கடிதம்
இப்படி நடக்கும்னு தெரிஞ்சுதான் அணிலாடும் முன்றில் தொடரின் கடைசில மகனுக்கு உணர்ச்சிப்பூர்வமா லெட்டர் எழுதி இருந்தாரோ? #NaMuthukumar
படைப்புகள்
அழிக்க முடியாத எழுத்துக்களாய், உன் படைப்புகள் என்றும் உலாவரும் இவ்வுலகில்#NaMuthukumar


Click it and Unblock the Notifications











