»   »  என்னத்த தேசிய விருது, என்னத்த கொடுத்தாங்க: ட்விட்டரில் தாளிக்கும் ரசிகர்கள்

என்னத்த தேசிய விருது, என்னத்த கொடுத்தாங்க: ட்விட்டரில் தாளிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருதுகள் திருப்தியாக இல்லை என்று கூறி மக்கள் ட்விட்டரில் விளாசியுள்ளனர்.

2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது அமிதாப் பச்சனுக்கும், நடிகைக்கான விருது கங்கனா ரனாவத்துக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கிடைத்துள்ளது. அனைவரும் பாலிவுட்காரர்கள். சிறந்த படத்திற்கான விருது பாகுபலிக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தேசிய விருதுகள் திருப்தியாக இல்லை என்று ட்விட்டரில் மக்கள் கூறியுள்ளனர்.

விருதுகள்

தேசிய விருதுகளும் பிலிம்பேர் விருதுகள் போன்று பணம் கொடுத்து வாங்குவது என்பது நிரூபனமாகியுள்ளது என பாயிசா ட்விட்டரில் குமுறியுள்ளார்.

போலி விருதுகள்

தேசிய விருதுகள் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த போலி விருதுகளை பார்க்க விரும்பவில்லை. நியாயமாக கிடைக்க வேண்டியவர்களுக்காக கேட்கிறோம் என அபிஜித் தெரிவித்துள்ளார்.

பாருங்க

தேசிய விருதுகள் குழுவே ஒரு படத்திற்காக சீயான் விக்ரம் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளார் என்பதை இந்த புகைப்படத்தில் பாருங்கள் என பாபு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விக்ரம்

ஐ படத்திற்காக விக்ரமுக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் . #nationalawards என பிரஷாந்த் பொங்கி எழுந்துள்ளார்.

கங்கனா

சிறந்த நடிகைக்கான பிரிவில் கங்கனாவுக்கு விருது கிடைத்ததை தவிர பிற எந்த விருதையும் ஏற்றுக் கொள்ள முடியாது #NationalAwards என்கிறார்
ஷாருக்கான்ஃபேன்.

தேசிய விருதுகள்

பெயர் தேசிய விருதுகள் ஆனால் இந்தி பட விருதுகள் போன்று தான் உள்ளது. முக்கிய விருதுகளை பிற மொழி படங்களுக்கும் கொடுங்கள் என கிறிஸ்டோபர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்

தேசிய விருதுகள்- இம்முறை கோலிவுட்டுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பல திறமைசாலிகள், படைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தரண் ட்வீட் செய்துள்ளார்.

English summary
Tweeples have already started slamming national awards as they feel that it is a complete disappointment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil