»   »  புடிச்சிட்டாங்களா, மறுபடியும் புடிச்சிட்டாங்களா?: ஷாருக்கானை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

புடிச்சிட்டாங்களா, மறுபடியும் புடிச்சிட்டாங்களா?: ஷாருக்கானை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க விமான நிலையத்தில் ஷாருக்கான் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர் டென்ஷனாக உள்ளார். ஆனால் நெட்டிசன்களோ அவரை கலாய்த்து ஜாலியாக உள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா செல்லும்போது பலமுறை குடியேற்றத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். காரணம் அவரது

பெயரில் இருக்கும் கான். என் பெயர் கான், நான் ஒரு தீவிரவாதி அல்ல என்று மை நேம் இஸ் கான் படத்தில் அவர் தெரிவித்தும் யாரும் கேட்பதாக இல்லை போன்று.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் ஷாருக்கான் கோபம் அடைந்துள்ளார். ஆனால் நெட்டிசன்களோ சந்தோஷமாக அவரை ட்விட்டரில் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

சகிப்புத்தன்மை இல்லை

அமெரிக்க விமான நிலையத்தில் ஷாருக்கான் தடுத்து நிறுத்தம்? மறுபடியுமா? சகிப்புத்தன்மை இல்லை என்று மறுபடியும் பாடு பேபி என்று ஷாருக்கானை ஒருவர் கலாய்த்துள்ளார்.

ஷாருக்கான்

அமெரிக்க விமான நிலையத்தில் தற்போது எப்படி உணர்கிறீர்கள் ஷாருக்கான்? தற்போது நீங்கள் சகிப்புத்தன்மையின் அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா தான் சிறந்தது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.

மும்பை ஸ்டேடியம்

மும்பை ஸ்டேடியத்தில் பாதுகாவலரை பிடித்து தள்ளியது போன்று அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரியையும் நீங்கள் செய்திருக்க வேண்டும்.

படங்கள்

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஷாருக்கானின் ஃபேன், ஹேப்பி நியூ இயர், ரா ஒன் படங்களை பார்த்திருப்பார்கள். அதனால் அவரை தடுத்து நிறுத்தி பழிவாங்கிவிட்டனர்.

இந்தியா

ஷாருக்கான் நீங்கள் அமெரிக்காவுக்கு செல்லும்போது உங்கள் பெயரால் தடுத்து நிறுத்தப்படுவீர்கள். இருப்பினும் இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்பீர்கள்.

English summary
Tweeples are making fun of Bollywood actor Shah Rukh Khan who got detained in Los Angeles aiiport.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil