»   »  ஓட்காவை ஓரமா வச்சிட்டு போய் தூங்குங்க..! - சர்ச்சை கிளப்பும் ராம்கோபால் வர்மாவுக்கு சூடு

ஓட்காவை ஓரமா வச்சிட்டு போய் தூங்குங்க..! - சர்ச்சை கிளப்பும் ராம்கோபால் வர்மாவுக்கு சூடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ட்விட்டரில் சர்ச்சை கிளப்புவதையே வேலையாகக் கொண்டுள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு, இயக்குநர் அனுராக் காஷ்யப் சூடு கொடுத்துள்ளார்.

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான படம் பாம்பே வெல்வெட். மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் வசூலிலும் பின் தங்கியது.

Tweet fight of RGV - Anurag Kashyap

இப்படத்தை பற்றியும், இயக்குனர் அனுராக் காஷ்யப் பற்றியும் ராம்கோபால் வர்மா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட படத்திற்கு அதன் இயக்குநர் ஆதரவாக பேசுவது எப்படி இருக்கிறது என்றால், ஒரு பெண்ணைப் பார்த்து நான் என்னை ரொம்ப விரும்புகிறேன் எனவே நீ என்னை விரும்புகிறாயா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை" என்று கூறுவது போல் இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்து வந்த அப்படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், பொறுமையிழந்து நேற்று அவருக்கு பதில் ட்டுவிட் செய்துள்ளார்.

அதில், "சார்... ஓட்காவை ஓரமாக வைத்துவிட்டு போய் தூங்குங்கள். ஐ லவ் யு...லாட் ஆப் கிஸ்ஸஸ்" என்று பதிலளித்துள்ளார். அனுராக்கின் ட்விட்டிற்கு பதிலளித்த ராம்கோபால் வர்மா, "நான் குடிப்பதை விட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. மேலும் நான் ஆண்களை முத்தமிடுவதில்லை; ஐ லவ் யு" என கூறியுள்ளார்.

English summary
Director Anurag Kashyap blasted Ram Gopal Varma for his sarcastic comments against his movie Bombay Velvet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil