»   »  ட்விட்டருக்கு டாட்டா காட்டப்போகும் ட்விட்டர் பிரபலம்!

ட்விட்டருக்கு டாட்டா காட்டப்போகும் ட்விட்டர் பிரபலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
டிவிட்டரை விட்டு வெளியே செல்லும் பிரபல நடிகர்..!!

மும்பை : இந்தியாவிலேயே அதிக ட்விட்டர் ஃபாலோயர்களைக் கொண்ட நடிகர் அமிதாப் பச்சன். தனது சினிமா பயணம் பற்றியும், புதிய தகவல்கள் குறித்தும் அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டேயிருப்பார்.

சில மாதங்களுக்கு முன்பு 30 மில்லியன் ஃபாலோயர்ஸ் எனும் மைல்கல்லை தொட்டு அசத்தினார் அமிதாப் பச்சன்.

இந்நிலையில், ட்விட்டரை விட்டு தான் விலகவேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஒரு ட்வீட் செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.

ட்விட்டர்

ட்விட்டர்

சமூக வலைத்தளங்களில் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம். பிரபலங்கள் பலரும் ட்விட்டர் வலைதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். எந்த பிரபலத்திற்கு எவ்வளவு பாலோயர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கான இமேஜ் ஆகவும் பார்க்கப்படுகிறது.

ஃபாலோயர்கள் அதிகம்

ஃபாலோயர்கள் அதிகம்

இந்திய நடிகர்களிலேயே ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டு முதலிடத்தில் நடிகர் அமிதாப்பச்சன் இருக்கிறார். 32.9 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். ஆனால், ட்விட்டர் தளம், தன் பாலோயர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

விலகவேண்டிய நேரம் வந்திடுச்சு

ட்விட்டர், என்னுடைய ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை குறைத்துவிட்டீர்கள் ? ஹாஹா... இது ஜோக் தான். உன்னை விட்டு விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. பயணத்திற்கு நன்றி. கடலில் பல மீன்கள் உள்ளன. இன்னும் நிறைய அற்புதங்கள் உள்ளன" என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

தற்போது ஷாருக்கானும் 32.9 மில்லியன் ஃபாலோயர்ஸை எட்டியிருக்கிறார். 40 மில்லியன் பாலோயர்களைப் பெற்று ட்விட்டரில் முதலிடத்தில் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ட்விட்டரில் அமிதாப்பச்சன் பதிவிடுவதை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களின் முக்கியத்துவம்

சமூக வலைதளங்களின் முக்கியத்துவம்

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலமாகவே, மக்களிடம் கருத்துகளைச் சொல்லி அதையே தனது அரசியல் அறிவிப்புக்கான தளமாகவும் பயன்படுத்தி வருகிறார். இனி வரும் காலமும் சமூக வலைதளங்களையே அதிகளவில் சார்ந்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

English summary
Amitabh Bachchan, who has more Twitter fans among Indian actors. A few months ago, Amitabh Bachchan had a 30 million followers on twitter. Amitabh Bachchan has made a tweet, "Time to get off from Twitter".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil