»   »  "மருத்துவ முத்தம்" காமத்தில் சேராது என்பது ஆரவுக்கு மட்டுமே தெரியும்... நெட்டிசன்கள் கலாய்

"மருத்துவ முத்தம்" காமத்தில் சேராது என்பது ஆரவுக்கு மட்டுமே தெரியும்... நெட்டிசன்கள் கலாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியாவுக்கு கொடுத்த முத்தம் காமத்தில் சேராது என்பது ஆரவ் போன்ற ஆள்களுக்கு மட்டுமே தெரியும் என்று டுவிட்டரில் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவ்வுடனான காதல் முறிந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த விவகாரத்தில் ஆரவ் ஓவியாவை காதலிக்கவில்லை என்று தெளிவாக கூறியும். அவர்தான் ஓவர் இமேஜினேஷன் செய்து கொண்டார் என்று மற்ற போட்டியாளர்கள் பேசினர்.

நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு அது மருத்துவ முத்தம் என்று ஆரவ் கூறி "முத்த நாயகன்" கமலையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆரவ்வுக்கு மட்டுமே தெரியும்

ஆரவ் போன்ற ஆட்களுக்கு மட்டுமே தெரியும் மருத்துவமுத்தம் காமத்தில் சேராது என்று.

பிரபல முத்த வைத்தியர்

தமிழகத்தின் முதல் பிரபல முத்த வைத்தியர் ஆரவ்.

கமல் சார் சொல்ல சொன்னார்

ஆரவ்: நான் ஓவியாவுக்கு மருத்துவமுத்தம் கொடுத்ததை உங்க எல்லார்ட்டயும் கமல் சார் சொல்ல சொன்னாரு
கணேஷ்: மருத்துவ முட்டையா? அது எங்க இருக்கு?

தந்தைக்கு மகள் கொடுக்கும் முத்தம்

வலி கண்ட தந்தைக்கு மகள் கொடுக்கும் முத்தம் கூட மருத்துவ முத்தம் தான்.....

சித்த மருத்துவமா முத்த மருத்துவமா

சித்த மருத்துவம் என்பதை முத்த மருத்துவம்னு நினைச்சிட்டான்போல ஆரவ்.

English summary
Twitter comments about Aarav's kiss to Oviya in Bigg boss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X