»   »  கலகலப்பு 2... என்ன சொல்றாங்க ட்விட்டர் குருவிகள்?

கலகலப்பு 2... என்ன சொல்றாங்க ட்விட்டர் குருவிகள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கலகலப்பு 2: சினிமா விமர்சனம்

இதற்கு முன்பெல்லாம் சுந்தர் சி படத்துக்கு இந்த அளவு எதிர்ப்பார்ப்பு, பரபரப்பு இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் கலகலப்பு 2 படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பிருந்தே ஏகத்துக்கும் எதிர்ப்பார்ப்பும் காத்திருந்தார்கள் மக்கள். மனசில் அவ்வளவு ஸ்ட்ரெஸ் போல...

இன்று படம் வெளியானதும், பார்த்தவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு விதத்தில் சமூக வலைத் தளங்களில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றனர்.

இவருக்குப் பிடிக்கலயாம்

இது ஆனந்த் என்பவரின் பதிவு. அவருக்கு இந்தப் படம் மரண மொக்கையாம். ரேட்டிங்கில் 2 தான் கொடுத்திருக்கிறார்.

பாராட்டு

ஆரிஃப் என்பவரோ பாராட்டித் தள்ளி இருக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடித் திருவிழா.
சுந்தர் சியின் வழக்கமான பாணியை விரும்புபவர்களுக்கு ஏமாற்றம் தராத படம். குறிப்பாக இரண்டாவது பகுதியில் யோகி பாபுவும் சிவாவும் கலக்குகிறார்கள். இப்பவே தியேட்டர்ல டிக்கெட் புக் பண்ணி குடும்பத்தோட போய் பாருங்க என சிபாரிசு செய்திருக்கிறார் ஆரிஃப்.

கமர்ஷியல் கிங்

கலகலப்பு 2 முழுக்க முழுக்க மன அழுத்தத்தைப் போக்கும் ஜாலியான நகைச்சுவைப் படம். கமர்ஷியல் பொழுதுபோக்குப் படம் தருவதில் தான் ஒரு கிங் என்பதை நிரூபித்துவிட்டார் சுந்தர் சி என்கிறது சித்துவின் விமர்சனம்.

அடிச்சு துவைச்ச கதைதான்

கலகலப்பு 2, அடிச்சு துவைச்ச கதைதான். இந்த பெரிய நட்சத்திரப் பட்டாளத்தில் சிவா மனம் கவர்கிறார். முதல் பாதி ட்ராமா.. இரண்டாம் பாதி நகைச்சுவை. நிக்கியும் கேதரினும் கவர்ச்சி காட்டி படத்துக்கு உதவுகிறார்கள் என்கிறது கனகராஜின் பதிவு

ஜாலியா சிரிங்க

கவலைகளை மறந்து ஜாலியா சிரிச்சிட்டு வர ஒரு படம் கலகலப்பு 2 என்கிறார் ஸ்ரீதேவி.

English summary
Twitter comments and reviews on Kalakalappu 2

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil