இந்தியன் 2 ல் மாற்றப்படும் அந்த இரண்டு பேர்... யாருன்னு தெரியுமா ?

சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங், 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற கிரைன் விபத்தில் 3 தொழிலாளிகள் உயிரிழந்ததால் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா, ஷங்கர் - லைகா ப்ரொடக்ஷன் வழக்கு போன்ற காரணங்களால் இந்தியன் 2 ஷுட்டிங் மீண்டும் துவக்கப்படவே இல்லை.

1996 ம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 எடுக்கப்பட உள்ளதாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ஷங்கர் - லைகா விவகாரத்தால் கிட்டதட்ட ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

டிசம்பரில் இந்தியன் 2

டிசம்பரில் இந்தியன் 2

தற்போது இந்தியன் 2 விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதால் விரைவில் ஷுட்டிங் துவக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அநேகமாக டிசம்பர் மாதத்தில் இந்தியன் 2 ஷுட்டிங் மீண்டும் துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஷங்கர் ஆர்சி15 படத்திலும், கமல் விக்ரம் படத்திலும் பிஸியாக இருப்பதால், இந்த வேலைகள் முடிந்த பிறகு இந்தியன் 2 வேலைகளை துவக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் – நடிகைகள்

நடிகர் – நடிகைகள்

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த், டெல்லி கணேஷ், விவேக் ஆகியோர் நடித்து வந்தனர். அனிருத் இசையமைக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

மரணமடைந்த விவேக்

மரணமடைந்த விவேக்

முதல் முறையாக கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் போலீஸ் ரோலில் நடித்து வந்த விவேக், இந்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானார். இதனால் ஏற்கனவே அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் வேறு ஒரு நடிகரை வைத்து அந்த காட்சிகளை எடுக்க உள்ளதாக ஷங்கர் ஏற்கனவே கூறி விட்டார். இதனால் விவேக் ரோலில் வேறு எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என படக்குழு தேடி வருகிறதாம்.

வயதான கேரக்டரில் காஜல்

வயதான கேரக்டரில் காஜல்

இதே போல் காஜல் அகர்வால் நடித்து வந்த ரோலில் நடிக்கவும் வேறு ஒருவரை தேடி வருகிறார்களாம். இந்த படத்தில் வயதான கமலுக்கு ஜோடியாக வயதான கேரக்டரில் நடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை என காஜல் அகர்வால் தரப்பில் இதுவரை உறுதி செய்யவில்லை.

இவரையும் மாற்றுகிறார்கள்

இவரையும் மாற்றுகிறார்கள்

இருந்தாலும் இது உண்மையாக இருக்கலாம் என இந்தியன் 2 படக்குழு நினைக்கிறதாம். அதனால் அவர் ரோலில் நடிக்க மற்றொரு நடிகையை தேர்வு செய்யும் வேலைகளை துவக்கி உள்ளார்களாம். முக்கிய ரோல்களில் நடித்து வந்த விவேக் மற்றும் காஜல் அகர்வால் ரோல்களில் நடிக்க ஆட்கள் தேர்வான பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்படலாம் அல்லது இவர்கள் நடித்த காட்சிகள் மட்டும் புதிதாக தேர்வு செய்யப்படுபவர்களை வைத்து எடுக்கப்பட்ட பிறகு ஷுட்டிங் மீண்டும் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X