»   »  அடுத்தடுத்து 2 நடிகைகள் பிணமாகக் கண்டுபிடிப்பு: என்ன தான் நடக்கிறது?

அடுத்தடுத்து 2 நடிகைகள் பிணமாகக் கண்டுபிடிப்பு: என்ன தான் நடக்கிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரே மாதத்தில் இரண்டு நடிகைகள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு வரும் இளம்பெண்கள் ஏராளம். அதில் சிலர் ஜெயிக்கிறார்கள், சிலர் தோற்றுவிடுகிறார்கள்.

தோல்வியை தாங்க முடியாமல் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

க்ரித்திகா சவுத்ரி

க்ரித்திகா சவுத்ரி

ஹர்திவாரை சேர்ந்த க்ரித்திகா சவுத்ரி பாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசையில் மும்பைக்கு வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை

கொலை

க்ரித்திகாவை அவரது வீட்டிலேயே வைத்து யாரோ கொலை செய்தனர். உடல் அழுகிவிடாமல் இருக்க ஏசியை ஆன் செய்துவிட்டு சென்றுள்ளனர். க்ரித்திகாவின் உடல் அழகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அஞ்சலி

அஞ்சலி

க்ரித்திகா கொலை செய்தியால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மும்பையில் வாடகை வீட்டில் தங்கியிருந்த போஜ்புரி நடிகை அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்.

தற்கொலை

தற்கொலை

அஞ்சலி தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் அவரது அம்மாவோ இது தற்கொலை அல்ல என்கிறார்.

பரபரப்பு

பரபரப்பு

ஒரே மாதத்தில் மும்பையில் இரண்டு நடிகைகள் உயிர் இழந்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்று அஞ்சலியின் செய்தியை பார்த்த நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Actresses Kritika Choudhary and Anjali Shrivastav have been found dead in their rented apartments in Mumbai. They were found dead in the same month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil