»   »  'வாழும்போது வைக்காதடா சேத்து... ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!' - இது 'மரண கானா'

'வாழும்போது வைக்காதடா சேத்து... ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!' - இது 'மரண கானா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

கானா உலகில் இன்று ரொம்பவே பிரபலமாகப் பார்க்கப்படும் கானா பாலாவும், மரண கானா விஜியும் 'பாண்டியோட கலாட்டா தாங்கல' படத்தில் இணைந்துள்ளனர்

"வாழும்போது வைக்காதடா சேத்து, ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!" - மரண கானாவின் சில வரிகள் இவை.

Two gana singers join for Pandiyoda Galatta Thaangala

வேறெந்த இசை வடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில்தான் அமைந்திருக்கிறது. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லாமல் மேஜை, பஸ்ஸின் படிக்கட்டுப் பகுதி, பஸ்ஸின் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் கானாவுக்கு பின்னணி இசையாகிவிடும்.

கானா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் கோலோச்சி வந்திருக்கிறார். இப்போது பிரபலமாகத் திகழ்பவர்கள் கானா பாலா மற்றும் மரண கானா விஜி.

Two gana singers join for Pandiyoda Galatta Thaangala

விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் 'பாண்டியோட கலாட்டா தாங்கல' திரைப்படத்தில் இந்த இருவரும் காதல் பற்றி பாடல் எழுதி,பாடி, நடித்துள்ளனர். சுகுமார் இசையமைத்துள்ளார்.

எஸ்டி குணசேகரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நிதின் சத்யா, ரேஷா ராஜா மற்றும் யோகிபாபு, சிங்கம் புலி, மயில்சாமி, இம்மான் அண்ணாச்சி, மனோ பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த கானா பாடல்கள் குறித்து இயக்குநர் குணசேகரன் பேசுகையில், "போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும் குமுறல்களையும் மட்டும் அல்ல; மனித வாழ்வையும் மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடிய தன்மை கானா பாடல்களுக்கு உண்டு.

அந்த கானா பாடல்களின் ஒரு வகையான மரண கானாவில் கைதேர்ந்தவர் மரண கானா விஜி. 'டங்கமாரி ஊதாரி' பாடலை பாடிய இவர் முதன் முதலாக முகம் காட்டியுள்ள படம் 'பாண்டியோட கலாட்டா தாங்கல'. படத்தில் 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற பாடலை எழுதி,பாடி, நடித்துள்ளார். மே 13 ஆம் தேதி படம் வெளியாகிறது," என்றார்.

English summary
Gana Bala and Marana Gana Viji have joined in Pandiyoda Galatta Thaangalai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil