»   »  ஆகஸ்ட் அட்டகாசம்: உங்கள் ராஜ் டிவியில் இரண்டு புதிய நிகழ்ச்சிகள் துவக்கம்

ஆகஸ்ட் அட்டகாசம்: உங்கள் ராஜ் டிவியில் இரண்டு புதிய நிகழ்ச்சிகள் துவக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ் தொலைக்காட்சியில் ஊர்வம்பு, க க க போ ஆகிய இரண்டு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

ராஜ் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி ஊர்வம்பு...

Two new programmes in Raj TV

சமுதாயத்தில் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்கள், அரசியல், சமுதாயம் ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது ஊர்வம்பு நிகழ்ச்சி.

இதனை பிரபல திரைப்பட நாயகி ஜாங்கிரி மதுமிதா மற்றும் சித்ரா ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளனர். மக்களின் கோரிக்கைகளையும், எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளையும் ஆதாரங்களுடன் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்குகின்றனர்.

சாதாரண குடிமகனால் கேட்க முடியாத கேள்விகள் அனைத்தும், இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். இதனை பார்ப்பவர்களுக்கு தங்களது எண்ண ஓட்டங்கள் வெளிப்பட்டுள்ளது போன்ற உணர்வு ஏற்படும். எனவே, இது உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தத்ரூபமான நிகழ்ச்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

க க க போ...

ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நகைச்சுவை நிகழ்ச்சி க க க போ...

ஆகஸ்ட் 7ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. தற்போதைய வேகமான வாழ்க்கை முறைகளால், மனஇறுக்கத்தில் உள்ள மக்களுக்கு அருமருந்தாக இருப்பது நகைச்சுவை நிகழ்ச்சிகள் தான். அந்த வகையில், நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். இதில், தற்போதைய முக்கிய செய்திகளை நகைச்சுவை கலந்து வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும், பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் வழங்க உள்ளனர்.

Two new programmes in Raj TV

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை கருவாக கொண்டு நகைச்சுவை பாணியில் நிகழ்ச்சி இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதன் மூலம், நேயர்களுக்கு புதிய சிந்தனையும் உருவாகும் என்பதே விருப்பம்.

English summary
Raj television network is launching two new programmes in the month of august. Don't miss them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil