»   »  ஷூட்டிங்கில் இருந்து வீடு திரும்பியபோது விபத்து: 2 டிவி நடிகர்கள் பலி

ஷூட்டிங்கில் இருந்து வீடு திரும்பியபோது விபத்து: 2 டிவி நடிகர்கள் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ககன் காங் மற்றும் அர்ஜித் லவானியா ஆகிய இருவரும் சாலை விபத்தில் பலியாகினர்.

மகாகாளி- அன்த் ஹி ஆரம்ப் ஹை இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர்கள் ககன் காங் மற்றும் அர்ஜித் லவானியா. அவர்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள அம்பேர்காவ்னில் நடத்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டனர்.

Two TV actors killed in road accident

2 நாட்கள் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு அவர்கள் இருவரும் ஒரே காரில் மும்பை திரும்பி வந்தனர். அவர்களின் கார் மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த டிரக் மீது பயங்கரமாக மோதியது.

படுவேகமாக மோதியதில் காரின் மேற்கூரை பெயர்ந்துவிட்டது. இந்த விபத்தில் ககன் மற்றும் அர்ஜித் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் நான்கு பீர் கேன்கள் இருந்துள்ளது.

Two TV actors killed in road accident

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Television actors Gagan Kang and Arjit Lavania were killed when their speeding car collided with a parked truck on the Mumbai-Ahmedabad highway.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil