»   »  கொடிக்கு யு... காஷ்மோராவுக்கு யுஏ!

கொடிக்கு யு... காஷ்மோராவுக்கு யுஏ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த தீபாவளிக்கு இரண்டு பெரிய படங்கள்தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்த இரண்டு படங்களுக்கும் சென்சாரும் முடிந்துவிட்டது.

U for Kodi and UA for Kashmora

எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார், அடுத்ததாக இயக்கியுள்ள கொடி படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இது அரசியல் கதை கொண்ட படம். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன்.


இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.


U for Kodi and UA for Kashmora

கோகுல் இயக்கத்தில் கார்த்தி - நயன்தாரா நடித்துள்ள காஷ்மோரா படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அக்டோபர் 28-ம் தேதி, அதாவது தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக வெளியாகிறது காஷ்மோரா.

English summary
Deepavali releases Dhanush's Kodi has got U and Karthi's Kashmora got UA from censor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil