»   »  அண்ணாதுரைக்கு சென்சார்ல என்ன ஆச்சு தெரியுமா?

அண்ணாதுரைக்கு சென்சார்ல என்ன ஆச்சு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் ஆன்டனியின் அண்ணாதுரை படம் சென்சாராகிவிட்டது. இந்தப் படத்துக்கு சென்சாரில் யு சான்று கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், யு ஏ சான்று கிடைத்துள்ளது, சில வெட்டுகளுடன்.

சுக்ரன் படம் மூலம் அறிமுகமாகி முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்த விஜய் ஆன்டனி, நான் படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் கமர்ஷியலா நன்றாகவே போகின்றன. குறிப்பாக பிச்சைக்காரன் சூப்பர் ஹிட்டடித்தது தமிழ், தெலுங்கில்.

UA for Annathurai

தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அண்ணாதுரை'. ஆக்‌ஷன் படம். ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சமீபத்தில் இந்தப் படம் சென்சார் செய்யப்பட்டது. சென்சார் குழு இந்தப் படத்துக்கு சில வெட்டுகளுடன் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நவம்பர் 30ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, டயானா, மகிமா, ராதாரவி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.சீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்தை, ராதிகா சரத்குமார் - விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்துள்ளனர்.

English summary
Vijay Antony's Annathurai movie has censored and awarded with UA certificate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil