»   »  கிடாரிக்கு யு ஏ!

கிடாரிக்கு யு ஏ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிராமத்து கமர்ஷியல் ஸ்பெஷலிஸ்ட் சசிகுமார் நடித்த கிடாரி படத்துக்கு யுஏ சான்று வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

படத்தில் வன்முறைக் காட்சிகள் சற்று தூக்கலாக இருப்பதால் யுஏ வழங்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டதால் தயாரிப்பாளருக்கு பிரச்சினை ஏதுமில்லை.


UA for Kidaari

பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள கிடாரி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக, ஏற்கெனவே அவருடன் வெற்றிவேலில் நடித்த நிகிலா நடித்துள்ளார்.


நெப்போலியன், சுஜா வாருணி, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகிறது.


சசிகுமார் படங்களுக்கு மினிமம் கேரண்டி இருப்பதால், படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுவிட்டன. படம் வெளியாகும் அடுத்த வாரத்தில் பெரிதாக போட்டியில்லை என்பதால் நல்ல ஓபனிங் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Director Sasikumar's rural commercial entertainer, Kidaari has been censored with U/A certificate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil