»   »  விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது... என்ன கொடுத்தாங்க தெரியுமா?

விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது... என்ன கொடுத்தாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸன் எழுதி இயக்கித் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை தணிக்கைக் குழு இன்று பார்வையிட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.

கமல் ஹாஸன் நடிப்பில் உருவாகி 2013 ம் ஆண்டு வெளியான படம் விஸ்வரூபம். இதன் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 அடுத்த ஆண்டே வெளியாகவிருந்தது. ஆனால் 5 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. இந்த ஆண்டு படத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளார் கமல் ஹாஸன்.

UA for Viswaroopam 2

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், முதல் பாகம் உருவான போதே எடுக்கப்பட்டுவிட்டன. மீதிக் காட்சிகள் அவ்வப்போது படமாக்கப்பட்டு வந்தன. அண்மையில் படத்தின் முழுப் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை கமல் ஹாஸன் முடித்தார்.

விரைவில் படத்தின் டீசர் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படத்தை தணிக்கை செய்ய விண்ணப்பித்திருந்தார் கமல் ஹாஸன். இன்று படம் தணிக்கை செய்யப்பட்டது.

படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழு. இதனால் அனைவரும் படம் பார்க்க முடியாது. பெரியவர்கள் துணையுடன் சிறியவர்கள் படம் பார்க்கலாம். தொலைக்காட்சியில் திரையிட தனி சான்று வாங்க வேண்டும்.

வரும் கோடையில் இந்தப் படத்தை வெளியில் கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. திரையுலக ஸ்ட்ரைக் முடிந்த பிறகு படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தில் கமல் ஹாஸன், பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.

English summary
The Regional censor office has censored Kamal Haasan's Viswaroopam and issued UA certificate

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X