»   »  என்னை அறிந்தால் படத்துக்கு யு ஏ... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது!

என்னை அறிந்தால் படத்துக்கு யு ஏ... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்துக்கு தணிக்கைக் குழுவில் யு ஏ சான்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தயாரிப்பாளர் படத்தை மறு தணிக்கைக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.


கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் கடந்த பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இரு முறை தள்ளிப் போடப்பட்டு, இப்போது பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


UA to Yennai Arinthaal

இந்த நிலையில் படத்தை சென்சாருக்கு நேற்று அனுப்பி வைத்தனர். படம் பார்த்த குழுவினர் யு ஏ சான்றுதான் அளித்தனர். க்ளைமாக்ஸ் மற்றும் சில காட்சிகளில் உள்ள வன்முறை காட்சிகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


எனவே படத்துக்கு யு சான்று பெற மறு தணிக்கைக் குழுவுக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் கவுதம் மேனன்.


சமீபத்தில் வெளியான ஷங்கரின் ஐ படம் யுஏ சான்று பெற்றது. இதை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக் போனார் தயாரிப்பாளர். ஆனால் அங்கும் யு சான்று கிடைக்காததால் யுஏ சான்றுடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The regional censor committee has issued UA certitficate to Ajith's Yennai Arinthaal.
Please Wait while comments are loading...