»   »  சண்டைக்காட்சியில் வில்லனிடம் அடிவாங்கி அழுத உதயநிதி ஸ்டாலின்!

சண்டைக்காட்சியில் வில்லனிடம் அடிவாங்கி அழுத உதயநிதி ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அவரது படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

உதயநிதி, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடிப்பில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள 'இப்படை வெல்லும்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் இசைத்தகட்டை வெளியிட்டார்.


Udayanidhi Stalin was crying to the villain in the fight scene

இந்த விழாவில் பேசிய உதயநிதி, 'டேனியல் பாலாஜியுடன் சண்டை போடும்போது எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் ஆர்.கே.சுரேஷ் உடன் சண்டை போட்டபோது அவர் நிஜமாகவே என்னை அடித்துவிட்டார்.


ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனிடம், 'இந்த ஆளு உண்மையாகவே அடிக்கிறார் சார், வலிக்குது' என அழுதேன். காட்சிகள் ரியலாக இருக்கவேண்டும் என்பதற்காக அடிவாங்கியும் நடித்தேன்' எனக் கூறியுள்ளார்.

English summary
Udayanithi, Manjima Mohan are plays lead roles in the film 'Ippadai Vellum' music release event held yesterday. In this function, Udayanithi said, "R.K.Suresh really struck me when played a fight with him."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil