»   »  ஆட்டோ டிரைவரால் விபச்சாரம்: உதயஸ்ரீ

ஆட்டோ டிரைவரால் விபச்சாரம்: உதயஸ்ரீ

Subscribe to Oneindia Tamil

சென்னை:சினிமா வாய்ப்புக்காக தருவதாகக் கூறி ஏமாற்றி என்னை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர் என டிவி நடிகை உதயஸ்ரீ கூறியுள்ளார்.

சென்னையில் விபச்சார ஒழிப்பு தனிப்படை போலீஸார் புரோக்கர்கள் 4 பேரை கைது செய்தனர். இவர்களால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட டிவி நடிகை உதயஸ்ரீ உள்ளிட்ட 3 பேரை மீட்டனர்.

உதயஸ்ரீ தனது வாக்குமூலத்தில்,

எனக்கு சொந்த ஊர் சென்னைதான். 16 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்ததது. 10 வயதிலும், 8 வயதிலும் மகன்கள் உள்ளனர்.

எனக்கும் என கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் பிரிந்து விட்டோம். வருமானத்திற்காக தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்தேன். ஊர்வம்பு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளேன்.

அப்போது ஆட்டோ டிரைவர் பாலகிருஷ்ணனுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு பல சினிமா தயாரிப்பாளர்களை தெரியும். நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன். ஆனால் அதற்கு சில தயாரிப்பாளர்களை திருப்திபடுத்த வேண்டும் என்றார். நானும் சரி என ஒப்புக் கொண்டேன்.

அவர்தான் என்னை விபசாரத்தில் ஈடுபடுத்தினார். என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல் நானும் இதில் ஈடுபட்டேன் என்றார்.

இப்போது மைலாப்பூரிலுள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் உதயஸ்ரீ.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil