twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனிதன்... தமிழ் வார்த்தையே இல்லைங்க... வரிவிலக்கு மறுப்புக்கு அரசு தரும் அடடே விளக்கம்

    By Mayura Akilan
    |

    சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், தயாரிக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மனிதன் படத்திற்கும் வரி விலக்கு மறுக்கப்பட்டுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மனிதன். இந்தப் படம் ஏப்ரல் 29 அன்று வெளியானது.

    Udhay's Manithan was also denied of the entertainment tax exemption

    இந்நிலையில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. மனிதன் என்பது தமிழ் வார்த்தையல்ல என்று காரணம் கூறப்பட்டுள்ளது.

    Udhay's Manithan was also denied of the entertainment tax exemption

    இந்தப் படம் தொடர்பாக தேர்வுக்குழு பார்வையிட்டு கீழ்க்கண்ட குறைகளைச் சொல்லியுள்ளது:

    * மனிதன் என்பது சமசுகிருதச் சொல். மனிதன் என்பதற்கு மாந்தன், மாந்தர் என்பதே தமிழ் சொல் ஆகும்.

    * நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் கடைத்தெருவில் நடக்கும் நிகழ்வுகள் போல உள்ளன.

    * அகல் விளக்கு மூலம் வழக்கறிஞர் சிகரெட்டைப் பற்றவைத்தல்.

    * நீதிமன்றக் காட்சிகள் நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

    இருப்பினும், தேர்வுக்குழுவில் இடம்பெற்ற ஒளிப்பதிவாளர் பாபு என்கிற என்.வி. அனந்தகிருஷ்ணனும் இயக்குநர் சி.வி. ராஜேந்திரனும் தலைப்பு தமிழில் உள்ளது, தமிழ் பண்பாட்டுக்கு உள்ள படம் என்கிற காரணங்களுடன் வரிவிலக்கு அளிக்க பரிந்துரை செய்துள்ளார்கள்.

    ஆனால் படத்தைப் பார்வையிட்ட ஐந்து உறுப்பினர்களில் மூன்று உறுப்பினர்கள் கேளிக்கை வரிவிலக்களிக்க தகுதியானது அல்ல என்று பரிந்துரை செய்ததால், கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என அரசு ஆணையிட்டுள்ளது.

    English summary
    Udhayanidhi Stalin starrer Manithan, directed by Ahmed hit the screens today and started garnering positive feedbacks majorly. All the good words being, the producer and actor is still continuing to struggle with the Entertainment Tax Exemption Board.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X