»   »  உதயநிதி படத்தின் டீசர் இன்று ரிலீஸ்!

உதயநிதி படத்தின் டீசர் இன்று ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கும் படம் 'இப்படை வெல்லும்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குப் பிறகு, தமிழ் ரசிகர்கள் மறந்திருந்த மஞ்சிமா மோகனுக்கு, இந்தப் படம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Udhayanidhi film's teaser release today

இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியான லுக்கில் இருந்த உதயநிதி, இந்தப் படத்தில் கண்ணாடி அணிந்து புதிய தோற்றத்தில் வருகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இப்படை வெல்லும்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
Gourav Narayanan is directing the movie 'Ippadai vellum' in Udhayanidhi Stalin's performance. Manjima Mohan and Soori are acting in the film which is produced by Lyca productions. The film's teaser will be released at 6 pm today evening.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil