»   »  ரஜினியை ஃபாலோ பண்ணும் உதயநிதி!

ரஜினியை ஃபாலோ பண்ணும் உதயநிதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியை ஃபாலோ பண்ணாத ஆளே கிடையாது.

றெக்க படத்தின் ஒரு காட்சியில் பன்ச் வசனம் பேச வேண்டும் விஜய்சேதுபதிக்கு.

அந்தக் காட்சிக்கு மட்டும் சுமார் ஒரு மணி நேரம் எடுத்துள்ளார். செட்டில் எல்லோருக்கும் ஆச்சர்யம். கே.எஸ்.ரவிகுமார் நேரடியாகவே 'எமோஷனல் காட்சியெல்லாம் உடனே செய்துவிடும் நீங்க ஏன் ஒரு பன்ச் டயலாக்குக்கு இவ்வளவு நேரம் எடுத்துக்குறீங்க...?' என்று கேட்டதற்கு விஜய் சேதுபதி சொன்ன பதில், "பன்ச் பேசினாலே தலைவரோட மாடுலேஷன் வந்துடுது. அவரோட தாக்கம் இல்லாம நடிக்கிறது கஷ்டம்," என்றாராம்.

பாபி சிம்ஹா, சிவகார்த்திகேயன் என இன்றைய இளம் ஹீரோக்கள் எல்லோருமே ரஜினியைத்தான் ஃபாலோ பண்ணுகிறார்கள்.

Udhayanidhi follows Rajini

ஓகே ஓகே வுக்கு பிறகு வரிசையாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த உதயநிதிக்கு ரஜினி டைட்டிலான மனிதன்தான் கைகொடுத்தது. அதனால் அடுத்து எழில் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு சந்திரமுகியில் சூப்பர் ஸ்டார் பேசும் 'சரவணன் இருக்க பயமேன்' வசனத்தை டைட்டிலாக வைத்திருக்கிறார்.

அதற்கு அடுத்து தளபதி பிரபு இயக்கும் படத்தில் நடிப்பவர் அதற்கு ரஜினியின் பாப்புலர் பாடலான 'பொதுவாக என் மனசு தங்கம்' வரிகளை டைட்டிலாக்கியிருக்கிறார். இதில் பார்த்திபன், சூரி, மயில்சாமி ஆகியோரும் நடிக்கிறார்கள். அடுத்து தூங்கா நகரம் கவுரவ் இயக்கும் படத்துக்கும் ரஜினி டைட்டில் ஒன்றை தீவிரமாக தேடிவருகிறார்.

English summary
Udhayanidhi Stalin is joining in the list of Rajinikanth followers after the success of Manithan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil