»   »  உதயநிதி ஸ்டாலின் இனி "மனிதன்".. !

உதயநிதி ஸ்டாலின் இனி "மனிதன்".. !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் புதிய படத்திற்கு மனிதன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'ஜாலி எல்.எல்.பி'. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின், அஹ்மத் இயக்கத்தில் அதில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மீண்டும் ஹன்சிகா...

மீண்டும் ஹன்சிகா...

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் உதயநிதியின் ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இது தவிர பிரகாஷ்ராஜ், ராதாரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சென்னையில் ஷூட்டிங்...

சென்னையில் ஷூட்டிங்...

இப்படத்தில் போமன் இரானி வேடத்தில் பிரகாஷ்ராஜும், அர்ஷத் வர்ஷி வேடத்தில் உதயநிதியும் நடித்துள்ளனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.

மனிதன்...

இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வரும் போதிலும், இதுவரை இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக மனிதன் எனப்பெயரிடப்பட்டுள்ளது.

ரஜினி படம்...

ரஜினி படம்...

ரஜினி நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1987ம் ஆண்டும் ரிலீசான படம் மனிதன். வெற்றிப்படமான இப்படத்தின் பெயர் தற்போது உதயநிதி படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

கெத்து..

கெத்து..

இதற்கிடையே, திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'கெத்து' திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The producer turned actor Udhayanidhi Stalin’s next film with director Ahmed has been titled as Manithan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil