»   »  மனிதன் கேளிக்கை வரிவிலக்கு மறுப்பு... மீண்டும் கோர்ட்டுக்குப் போகும் உதயநிதி!

மனிதன் கேளிக்கை வரிவிலக்கு மறுப்பு... மீண்டும் கோர்ட்டுக்குப் போகும் உதயநிதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது மனிதன் படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு மறுத்துவிட்டதால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - மனிதன். இந்தப் படம் ஏப்ரல் 29 அன்று வெளியானது. இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. மனிதன் என்பது தமிழ் வார்த்தையல்ல என்று காரணம் கூறப்பட்டுள்ளது.


Udhayanidhi goes to court against TN Govt

தேர்வுக்குழுவில் இடம்பெற்ற ஒளிப்பதிவாளர் பாபு என்கிற என்.வி. அனந்தகிருஷ்ணனும் இயக்குநர் சி.வி. ராஜேந்திரனும் தலைப்பு தமிழில் உள்ளது, தமிழ் பண்பாட்டுக்கு உள்ள படம் என்கிற காரணங்களுடன் வரிவிலக்கு அளிக்க பரிந்துரை செய்தாலும், படத்தைப் பார்வையிட்ட ஐந்து உறுப்பினர்களில் மூன்று உறுப்பினர்கள் கேளிக்கை வரிவிலக்களிக்க தகுதியானது அல்ல என்று பரிந்துரை செய்ததால், கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என அரசு ஆணையிட்டுள்ளது.


Udhayanidhi goes to court against TN Govt

இதுதொடர்பாக உதயநிதி கூறியதாவது:


திங்கள் அன்று அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர உள்ளேன். இதில் நான் வெற்றி பெறுவேனா என்று தெரியாது. ஆனால் நான் தொடர்ந்து போராடுவேன் என்று கூறியுள்ளார்.


ஏற்கெனவே உதயநிதி தயாரித்த படங்களுக்கு தமிழக அரசு வரிவிலக்கு மறுத்ததும், அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் போய் சலுகை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Udhayanidhi Stali is going to the court against the TN govt's tax free denial for his Manithan movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil