»   »  உதயநிதி படத்தின் தலைப்பாகிய ரஜினியின் வசனம்

உதயநிதி படத்தின் தலைப்பாகிய ரஜினியின் வசனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி நடித்து வரும் படத்திற்கு ரஜினியின் வசனமான, சரவணன் இருக்க பயமேன் என்ற பெயரை வைத்துள்ளனர்.

தயாரிப்பாளராக திரைக்கு வந்து பின்பு நடிகனாகவும் தனது பயணத்தை தொடர்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவரது படங்கள் பெரும்பாலும் சந்தானம் கூட்டணியில் காமெடி படமாகவே வந்துள்ளது.

Udhayanidhi movie's Rajinikanth connection

தற்போது இவர் தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று எழில் இயக்கும் திரைப்படம். இந்த படத்தினை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

இப்படத்தில், இவர் முதல் முறையாக சூரியுடன் கைகோர்க்கவுள்ளார். இவர்களுடன் ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் வில்லனாக ஸ்டூடியோ 9 ஆர் கே சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சந்திரமுகி படத்தில் ரஜினி பேசும் "சரவணன் இருக்க பயமேன்" என்ற வசனத்தை இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.

சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் முன்னணி நடிகர்கள் பேசிய வசனங்களே தலைப்பாக வைக்கின்றனர். எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா போன்ற படங்களின் வரிசையில் சரவணன் இருக்க பயமேன் பெயரும் தற்போது இணைந்துள்ளது.

    English summary
    Udhayanidhi Stalin's upcoming movie being directed by Ezhil gets Rajinikanth's famous dialogue 'Saravanan Irukka Bayamen'.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil