»   »  லைக்காவுடன் இணைந்து சிகரம் தொடப் போகும் உதயநிதி!

லைக்காவுடன் இணைந்து சிகரம் தொடப் போகும் உதயநிதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சிகரம் தொடு' புகழ் கவுரவ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பது உறுதியாகியுள்ளது.

மனிதன் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி, விஷ்ணு, மஞ்சிமா மோகன் நடிக்கவிருந்த படம் எதிர்பாராதவிதமாக கைவிடப்பட்டது. இதனால் தனது அடுத்த படத்தைத் தேர்வு செய்வதில் உதயநிதி மிகுந்த கவனம் காட்டி வந்தார்.

Udhayanidhi Next Team Up with Gauvurav

தூங்கா நகரம் சொதப்பினாலும் ஏடிஎம் கொள்ளையைப் பெற்றி வெளியான சிகரம் தொடு கவுரவ்வுக்கு சொல்லிக் கொள்ளும் வெற்றியாக அமைந்தது. இந்நிலையில் கவுரவ் அடுத்து இயக்கப்போகும் படத்தில் உதயநிதி நடிப்பது உறுதியாகியுள்ளது.

உதயநிதி நடிப்பில் கடைசியாக வெளியான மனிதன் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.இதனால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு உதயநிதி வந்திருக்கிறார்.

இதற்காக கடந்த ஒரு மாத காலமாகக் கதை கேட்டு வந்த உதயநிதிக்கு, கவுரவ் சொன்ன கதை பிடித்துப் போய்விட அவரையே தனது அடுத்த இயக்குநராகத் தேர்வு செய்திருக்கிறார்.

கவுரவ்-உதயநிதி முதன்முறையாக இணையும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜூலை மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பினை தொடங்கவுள்ளனர். இதுவரை சொந்தத் தயாரிப்பில் நடித்துவந்த உதயநிதி, முதன்முறையாக வெளிநிறுவனமொன்று தயாரிக்கும் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை.

English summary
Udhyanidhi Team Up With Sigaram Dhodu Fame Gaurav for his Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil