உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படம்... தணிக்கை சான்றிதழ் கிடைச்சாச்சு... ரிலீசுக்கும் ரெடி!

சென்னை :நடிகர் உதயநிதி, தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது படத்தின் சென்சார் முடிக்கப்பட்டு சான்றிதழ் கிடைத்துள்ளது.

நடிகர் உதயநிதி

நடிகர் உதயநிதி

நடிகர் உதயநிதியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்ட்டிக்கள் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இவரது கனா படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மே 20ல் ரிலீஸ்

மே 20ல் ரிலீஸ்

படம் தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப்படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

போனிகபூர் தயாரிப்பு

போனிகபூர் தயாரிப்பு

படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். படத்தை போனிகபூர் தயாரித்துள்ள நிலையில், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, மயில்சாமி, சாயாஜி ஷிண்டே உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரியாக உதயநிதி

காவல்துறை அதிகாரியாக உதயநிதி

படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் உதயநிதி. இந்நிலையில் படம் தற்போது தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். உடன் போஸ்டரையும் இணைத்துள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் உதயநிதி

அடுத்தடுத்த படங்களில் உதயநிதி

இந்தப் படத்தை தொடர்ந்து கண்ணை நம்பாதே, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி. படத்தை ஜீ ஸ்டூடியோசுடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் முதல்முறையாக காவல் அதிகாரி கேரக்டரில் உதயநிதி நடித்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Recommended Video

Kiruthiga Udhayanidhi Exclusive | Paper Rocket Series பண்ண முடியாதுன்னு நினச்சேன் | Filmibeat Tamil
பன்முக செயல்பாடு

பன்முக செயல்பாடு

சிறந்த நடிகராக மட்டுமின்றி சிறப்பான தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் கோலிவுட்டில் வலம்வருகிறார் உதயநிதி. அடுத்தடுத்த பிக் பட்ஜெட் படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறார். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு இவரது நடிப்பில் வெளியாகவுள்ள நெஞ்சுக்கு நீதி படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X