»   »  படம் நல்லாருந்தா உடனே விமர்சனம் கொடுங்க... இல்லேன்னா....! - உதயநிதி

படம் நல்லாருந்தா உடனே விமர்சனம் கொடுங்க... இல்லேன்னா....! - உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம் நல்லாருந்தா உடனே விமர்சனம் கொடுங்க என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் - ரெஜினா - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'சரவணன் இருக்க பயமேன்'. இப்படத்தை எழில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

Udhayanidhi's request to media

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சரவணன் இருக்க பயமேன்' படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள்," என்றார்.

Udhayanidhi's request to media

சமீபத்தில்தான் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், எந்த படங்களுக்கும் விமர்சனம் கொடுப்பதாக இருந்தால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் எழுதுங்கள் என்று 'உத்தரவு' போட்டிருந்தார். உதயநிதி ஸ்டாலினோ நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்கிறார். யார் சொல்வதைக் கேட்பது? முதலில் இப்படியெல்லாம் மாற்றி மாற்றி 'உத்தரவு' போட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

English summary
Actor Udhayanidhi Stalin requested media to give reviews as early as possible whether the movie is good.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil