»   »  விஜய் ஆன்டனிக்கு உதயநிதியின் எச்சரிக்கை!

விஜய் ஆன்டனிக்கு உதயநிதியின் எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் ஆன்டனிக்கு உதயநிதியின் எச்சரிக்கை!- வீடியோ

அண்ணாதுரை என்று தலைப்பு வைத்திருப்பதால் ரிலீஸ் நேரத்தில் ஐடி ரெய்டு கூட வரலாம் என்று விஜய் ஆன்டனியை எச்சரித்தார் உதயநிதி ஸ்டாலின்.

இன்று சென்னையில் நடந்த அண்ணாதுரை இசை வெளியீட்டு விழாவில் மனைவியும் இயக்குநருமான கிருத்திகாவுடன் கலந்து கொண்டார் உதயநிதி.

Udhayanidhi's warning to Vijay Antony

அவர் வாழ்த்திப் பேசுகையில், "அண்ணாதுரைனு தலைப்பு வச்சிருக்கீங்க, ரிலீஸ் நேரத்தில் ஐடி ரெய்டு வரலாம், தலைப்பை மாற்றச் சொல்லி சிலர் வரலாம். ஜாக்கிரதையாக இருங்கள்," என்றார்.

தயாரிப்பாளர் டி சிவா பேசுகையில், "அண்ணாதுரை என தலைப்பை வைத்து விட்டு, தவறான படத்தை எடுக்க மாட்டார்கள். சர்ச்சைக்காக தலைப்பு வைப்பவர்கள் அல்ல சரத்குமாரும், விஜய் ஆண்டனியும். இந்த படத்துக்கு சர்ச்சை என எதுவும் தேவையில்லை, கதையே போதும். உங்கள் சொந்த தயாரிப்பை தாண்டி வெளி தயாரிப்பாளர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள்," என்றார்.

English summary
Udhayanidhi has warned actor Vijay Antony to take care from IT raids and other controversies due to the film's title (Annadurai).
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos