"அவர் படம்னா ஹீரோ ஃப்ரெண்டா நடிக்கக்கூட ரெடி.." - 'நிமிர்' இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி!

By Vignesh Selvaraj

Recommended Video

'நிமிர்' இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி!

சென்னை : உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகவிருக்கும் படம் 'நிமிர்'. பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுடன் நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திக்ரகனி, டைரக்டர் மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

'நிமிர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

படம் பார்த்ததே இல்லை

படம் பார்த்ததே இல்லை

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பிரியதர்ஷன் சார் இயக்கத்தில் நடித்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தைகூட பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லையாம். ஆனாலும், என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்திற்கு என்னை நாயகனாக்கியிருக்கிறார்.

திட்டினால் கூட சிரித்துக்கொண்டே

திட்டினால் கூட சிரித்துக்கொண்டே

பயந்துகொண்டே முதல்நாள் ஷூட்டிங்குக்கு சென்றேன். அவர் திட்டினால்கூட சிரித்துக்கொண்டே திட்டினார். ஒரு குழந்தையிடம் வேலைவாங்குவது போன்று இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். அதோடு சினிமாத்தனம் இல்லாத ஒரு சினிமாவை எடுத்துள்ளார். அந்த அளவுக்கு யதார்த்தமான படம் இந்த 'நிமிர்'.

ஹீரோவுக்கு ஃப்ரெண்டா இருந்தாலும்

ஹீரோவுக்கு ஃப்ரெண்டா இருந்தாலும்

அவருடன் வேலை செய்தது ரொம்ப நல்ல அனுபவமாக அமைந்தது. தொடர்ந்து பிரியதர்ஷன் இயக்கும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அடுத்தபடியாக அவர் இயக்கும் படத்தில் என்னை ஹீரோவுக்கு ஃப்ரெண்டாக நடிக்க அழைத்தாலும் நடிப்பேன்.

அப்பாவாக இயக்குநர் மகேந்திரன்

அப்பாவாக இயக்குநர் மகேந்திரன்

இயக்குநர் மகேந்திரன் எனது அப்பாவாக நடித்துள்ளார். அவர்தான் இந்தப் படத்திற்கு நிமிர் என்று தலைப்பு வைத்தார். தெறி படத்திற்கு பிறகு நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், இந்தப் படத்தின் கதை பிடித்ததால் நடித்தார்.

சமுத்திரக்கனியுடன் சண்டை

சமுத்திரக்கனியுடன் சண்டை

இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள சமுத்திரக்கனிக்கும், எனக்கும் இடையே ஒரு சண்டைக்காட்சி உள்ளது. ஒருநாளில் படமாக்கி விடுவதாக சொன்ன அந்தக் காட்சியை மூன்று நாட்களாக படமாக்கினார்கள். இரண்டு பேருமே உடம்பில் நிஜமாக அடி விழாமல் நடித்தோம்." எனக் கூறினார் உதயநிதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X