»   »  பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் படத்தில் நடிக்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தயாரிப்பாளராக இருந்து நடிகராகியுள்ள உதயநிதி ஸ்டாலின் காமெடி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.


Udhayanidhi Stalin to act in Priyadarshan's movie

படப்பிடிப்பு ஜுலை 15ம் தேதி துவங்குகிறது. படம் குறித்து பிரியதர்ஷன் கூறும்போது,


உதயநிதியை வைத்து நான் இயக்கும் படம் மகேஷின்டே பிரதிகாரம் மலையாள படத்தின் ரீமேக் என்று சொல்வது சரியில்லை. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் பல திருத்தம் செய்கிறேன்.


இந்த படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். எம்.எஸ். பாஸ்கரை ஒப்பந்தம் செய்துள்ளோம். மலையாள நடிகை நமிதா பிரமோதை ஹீரோயினாக்க திட்டமிட்டுள்ளோம்.


படப்பிடிப்பை நடத்த தேனி சிறந்த இடமாக இருக்கும். பிற நடிகர், நடிகைகள் குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

English summary
Udhayanidhi Stalin is set to act in national award winning director Priyadarshan's movie. Mollywood actress Namita Pramod might play his love interest in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil