»   »  அஜீத் பற்றி நான் தவறாக பேசவில்லை- உதயநிதி ஸ்டாலின்

அஜீத் பற்றி நான் தவறாக பேசவில்லை- உதயநிதி ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என்னைப் பற்றி தவறான வதந்திகள் எதையும் பரப்ப வேண்டாம் என்று நடிகர் உதயநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட ஒரு டுவிட்டுக்கு, அஜித் ரசிகர் ஒருவர் அவரை கிண்டல் செய்து கமெண்ட் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான உதயநிதி அவரிடம் அஜித்தை பற்றி தவறான வார்த்தைகளால் திட்டியதாக ஒருசில இணையதளங்களில் செய்தி வெளியானது.

இதுபற்றி அறிந்ததும் எப்படி எங்கள் தலைவரை நீங்கள் திட்டலாம் என்று வழக்கம்போல அஜீத் ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விட்டனர்.

Udhayanidhi Stalin Commented Ajith?

ட்விட்டரில் ஆரம்பித்த இந்த சண்டை பெரியளவில் பரவி இணையதளங்களிலும் செய்தியாக வரத்தொடங்கி இருக்கிறது, இதனால் அதிர்ச்சியடைந்த உதயநிதி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

நான் அஜித்தைப் பற்றித் தவறாக எதுவும் சொல்லவில்லை, எனக்கு அவர் மீது மிகுந்த மதிப்பு உண்டு என்று சொன்னதோடு, தவறான செய்திகளைப் பரப்பவேண்டாம் என்று இணையதளங்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் உதயநிதி.

மேலும் என்னைப் பற்றியோ நான் நடிக்கும் படங்களைப் பற்றியோ எந்தச் செய்தியை வெளியிடுவதானாலும் என்னைக் கேட்டுவிட்டு வெளியிடுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

English summary
Udhayanidhi Stalin Says "The news that I insulted Thala Ajith sir in Twitter is just rubbish! I have great respect towards him! Pls stop spreading false news".Request websites to pls recheck and verify wit me b4 carrying a news abt me or my film! Pls!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil