»   »  உதயநிதி ஸ்டாலின்-சந்தானம் கெமிஸ்ட்ரியை முறியடிக்க வரும் சூரி

உதயநிதி ஸ்டாலின்-சந்தானம் கெமிஸ்ட்ரியை முறியடிக்க வரும் சூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் காமெடி கெமிஸ்டிரியை முறியடிக்க வருகிறார் சூரி. முடியுமா என்று கேட்டால் படத்தை பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும்.

வெற்றி என்னும் சொல்லுக்கு ஆணி வேறாக செயல்படுவது விடா முயற்சி தான். தன் நடிப்பினை பற்றி எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தன்னுடைய கடினமான உழைப்பாலும், சினிமா மீது வைத்திருக்கும் காதலாலும், தமிழ் திரை உலகில் வெற்றி பெற்று வருபவர் தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

Udhayanidhi Stalin - Director Ezhil's comedy caper takes off from Mid - August

தயாரிப்பாளர், நடிகர் என அவருடைய வெற்றிகள் தமிழ் சினிமாவில் நீண்டு கொண்டே போகிறது போகிறது. ஒரு நடிகராக பல சவால்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் வெற்றி கண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் காமெடி கதை களங்களை தேர்வு செய்து நடித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அதிரடி, செண்டிமெண்ட் என எல்லா வகை படங்களிலும் வெற்றிகளை பதித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் அதிரடியாக களமிறங்கும் பொழுது சில எதிர்ப்புகள் வந்தன. ஆனால், அதை ஒரு பொருட்டாக கருதாமல், தன் இலக்கினை நோக்கி முன்னேற ஆரம்பித்தார். அந்த துணிச்சலே மனிதன் திரைப்படத்திற்கு இவருக்கும், இவரது திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இப்படி தனித்துவத்தை பெரும் அளவில் விரும்பும் உதயநிதி ஸ்டாலின் தற்போது இயக்குனர் எழில் உடன் மீண்டும் ஒரு காமெடி திரைப்படத்திற்கு இணைந்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

"இந்த உலகத்தில் மிகவும் கடினமான ஒரு வேலை, அடுத்தவர்களை சிரிக்க வைப்பது தான். இதை நான் நடித்த காமெடி படங்கள் மூலமாக தான் உணர்ந்தேன். அப்படிப்பட்ட நகைச்சுவையை கையாளுவதில் சிறந்து விளங்கும் ஒரு இயக்குனர் எழில் சார். எந்த இடத்தில் டைமிங் காமெடி கொடுக்க வேண்டும், எந்த சீனில் கௌண்டர் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் அவர். அவருடைய இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வரும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமானது, இந்த படத்திலும் அதையே தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திரைப்படத்தை காண வரும் மக்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் இந்த படம் எந்த விதத்திலும் குறையை தராது.." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பாசிட்டிவான உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வெற்றி பாடல்களை வழங்கி வரும் டி இமான் இந்த படத்திற்கு இசை அமைப்பது மேலும் சிறப்பு. நகைச்சுவைக்கு சற்றும் பஞ்சம் இருக்காத வகையில் அமைய போகும் இந்த திரைப்படத்தின் கதா நாயகிகளாக ரெஜினா கசான்ட்ரா அலெக்சாண்டர் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க உள்ளனர்.

இது நாள் வரை சந்தானத்துடன் சேர்ந்து காமெடி செய்தார் உதயநிதி ஸ்டாலின். தற்போது சந்தானம் முழுநேர ஹீரோவான நிலையில் சூரியுடன் கைகோர்த்துள்ளார். புது முயற்சியை வரவேற்பதில் தப்பில்லை.

  For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS
  For Daily Alerts

   English summary
   The secret of success lies beneath the motto of ‘Acceptance and Strive for Change’ and this has been a predominant mantra in showbiz. Recognizing the self and realizing the need for change makes an individual. Udhayanidhi Stalin teams up with filmmaker Ezhil for a new project, which would be an out and out comedy caper.

   சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more