»   »  மனிதன் படத்துக்கும் வரிவிலக்கு அளிக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றம் போவேன்! - உதயநிதி

மனிதன் படத்துக்கும் வரிவிலக்கு அளிக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றம் போவேன்! - உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதன் படத்துக்கும் வரி விலக்கு வழங்காவிட்டால் நிச்சயம் நான் நீதிமன்றம் போவேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மனிதன். இந்தப் படம் ஏப்ரல் 29 அன்று வெளிவருகிறது.


இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரஜினி படத் தலைப்பு மனிதன். இந்தப் படத்துக்கு அந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதால் அனுமதி பெற்று பயன்படுத்தியுள்ளோம்.


Udhayanidhi Stalin owes to go court to get tax free for Manithan

இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு, யூ சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் மனிதன் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் வரிவிலக்கு குழு இன்று படத்தைப் பார்த்துள்ளது.


என்னுடைய முந்தைய படங்கள் யூ சான்றிதழ் பெற்றபோதும் வரிவிலக்கு பெறமுடியாமல் போனது. நீதிமன்றம் போய்தான் வரிவிலக்கு ஆணை பெற்றேன். மனிதன் படத்துக்கு வரிவிலக்கு அளிக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்," என்றார்.

English summary
Udhayanidhi Stalin says that he would go to the court, whether the tax free recommendation committee not sanctioned Tax free for the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil