முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த உதயநிதி... கலகத் தலைவன் அப்டேட்ஸ்

சென்னை: கலகத் தலைவன் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார் உதயநிதி.

திரைப்படங்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது, நடிப்பது, அரசியல் என்பதை தாண்டி தனிப்பட்ட விசயங்களையும் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் உதயநிதி.

தான் நடிக்க வந்ததை எப்படி வீட்டில் இருந்தவர்கள் பார்க்கத் துவங்கினார்கள் இப்போது என்ன சூழ்நிலை என்று கூறியுள்ளார்.

கிருத்திகாவின் பதில்

கிருத்திகாவின் பதில்

நான் நடிக்கப் போகிறேன் என்று என் மனைவி கிருத்திகாவிடம் கூறியபோது என்ன திடீரென என்று கேட்டார். அப்போது, நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றுதான் திருமணத்திற்கு முன் வாக்குறுதி கொடுத்தேன். நடிக்க மாட்டேன் என்று கூறவில்லையே என்று சொல்ல, கிருத்திகாவும் நான் நடிப்பதற்கு சம்மதித்தார். அப்பாவிடம் எந்தா மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அம்மாவிற்குதான் நான் நடிப்பது பிடிக்கவில்லை. மாமன்னன் கடைசி படம் என்று க்கூறியிருந்தேன் ஆனால் இப்போது ராஜ்கமல் நிறுவனத்திற்கு படம் நடிக்க ஒப்பந்தமானதால் ஏன் என்றூ அம்மா கேட்டார்கள்.

கிரிஞ்

கிரிஞ்

கிரிஞ், பூமர் போன்ற சொற்கள் எனக்கு சுத்தமாக தெரியாது. ஒரு முறை நான் விநியோகம் செய்த படத்தை நானும் மாரி செல்வராஜும் ஒன்றாக பார்த்தோம். ஒரு காட்சி வரும்போது கிரிஞ் காட்சி என்று கூறினார். மீண்டும் இன்னொரு காட்சிக்கும் அதே சொல்லை பயன்படுத்தினார், எனக்கு புரியாமல் அவரிடம் கேட்க, உங்கள் மகனிடம் கேளுங்கள் என்று சொன்னார். ஃபோன் செய்து கேட்க நேரமில்லை, நீங்களே கூறுங்கள் என்று சொன்னபோதுதான் எனக்கு விளக்கினார்.

பூமர்

பூமர்

அதேபோல வீட்டில் கிருத்திகாவை பூமர் அம்மா என்று எங்களது மகன் அழைக்கிறான். ஏன் அப்படி அழைக்கிறான் என்று கேட்டபோது, முன்பு நடந்த பழைய கதைகளை கூறியதால் பூமர் அம்மா என்று கிண்டலடிப்பதாக கிருத்திகா கூறினார். கிருத்திகா இயக்கியிருந்த பேப்பர் ராக்கெட் திரப்படம் வெற்றி பெற்றதால் தற்சமயம் அதனுடைய இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார். நான்தான் தயாரிக்கிறேன் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

முத்தக் காட்சி

முத்தக் காட்சி

கலகத் தலைவன் திரைப்படத்தில் ஒரு முத்த காட்சி இருந்தது. இயக்குநர் அந்தக் காட்சியை கேமரா அங்கிளில் ஏமாற்றி எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால், படப்பிடிப்பின்போது உண்மையாக கதாநாயகிக்கு முத்தம் கொடுக்கச் சொன்னார். நான் முடியவே முடியாது என்று மறுத்ததால் வேறு வழியின்றி கேமரா கோணத்தில் மாற்றி எடுத்தார். படத்தில் நான் வரும் காட்சிகள் குறைவாகத்தான் இருக்கும். ஆராவ்விற்குதான் நிறைய காட்சிகள் இருக்கிறது என்று பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார் உதயநிதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X