டான், நான் வேண்டாம்னு சொன்ன கதை...சீக்ரெட்டை சொன்ன பிரபல நடிகர்

சென்னை : டான் படம் பற்றிய பல உண்மைகளை ஓப்பனாக மேடையில் போட்டு உடைத்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர். இதைக் கேட்டு டான் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயனே ஆடிப் போய் விட்டார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, சூரி உள்ளிட்ட பலர் நடித்த படம் டான். இந்த படம் மே 13 ம் தேதி ரிலீசாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது. ரிலீசான ஒரு வாரத்திற்குள் 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது.

அதுக்குள்ள 25 நாள் ஆகிடுச்சா

அதுக்குள்ள 25 நாள் ஆகிடுச்சா

லைகா ப்ரொடக்ஷன்ஸ், எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இந்த படம் ரிலீசாகி 25 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இதனை கொண்டாடும் விதமாக டான் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், எஸ்ஜேசூர்யா, சுபாஸ்கரன் அல்லிராஜா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நான் தான் முதலில் பார்த்தேன்

நான் தான் முதலில் பார்த்தேன்

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், படம் வெற்றி பெற்றதற்கு படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். டான் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே நான் கூறி இருந்தேன், இந்த படம் டாக்டர் படத்தின் வசூலை மிஞ்சும் என்று. அது தற்போது உண்மையாகி உள்ளது. படத்தை நான் தான் முதலில் பார்த்தேன். நாங்கள் 4 பேர் பார்த்தோம். ஃபர்ஸ்ட் ஆஃப் பார்த்து விட்டு, ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டோம். என்ன படம் இப்படி இருக்கு என்றோம்.

உதயநிதி சொன்ன சீக்ரெட்

உதயநிதி சொன்ன சீக்ரெட்

செகண்ட் ஆஃப் பார்த்ததும் சொல்லிவிட்டேன், எதற்காக இல்லாவிட்டாலும் கடைசி ஒரு மணி நேரத்திற்காக படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றேன். இப்போ படம் ரிலீசாகி, வெற்றியும் பெற்று விட்டது. அதனால் சில உண்மைகளை சொல்லலாம் என்று நினைக்கிறேன். சிவா உங்களுக்கு தெரியுமா...இந்த கதையை வேறு ஒரு ஹீரோ கேட்டுட்டு முடியாதுன்னு சொல்லிட்டார். அப்புறம் தான் உங்களிடம் சொன்னார்கள். அது தெரியுமா. அந்த ஹீரோ வேற யாரும் இல்லை, நான் தான்.

நோ சொல்ல இது தான் காரணம்

நோ சொல்ல இது தான் காரணம்

நல்ல வேளை நான் நடிக்கல. படத்தில் ஸ்கூல் பையன் போன்ற சீன் என்னால் நடிக்க முடியாது என்பதால் தான் இந்த படத்தில் நான் நடிக்க மறுத்து விட்டேன். யாரிடம் போனால் நன்றாக வருமோ அவர்களிடம் தான் சென்றுள்ளது. ஸ்கூல் பையன் ரோலும் சரி, கடைசியில் வரும் அப்பா-மகன் சென்டிமென்ட் சீனும் சரி சத்தியமாக எனக்கு செய்ய வராது. ஆனால் அதை சிவா மிக அற்புதமாக செய்திருந்தார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X