இன்று வலிமை டிரைலர்...நாளைக்கு என்ன தெரியுமா...போனி கபூர் வெளியிட்ட அறிவிப்பு
சென்னை : இன்று அஜித்தின் வலிமை டிரைலர் தெலுங்கு, கன்னட, இந்தி மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ள போனி கபூர், மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ஒரே நேரத்தில் இத்தனை அறிவிப்பா என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க போகிறார். இதற்கிடையில் மற்றொரு முக்கியமான, அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார்.

ஆர்ட்டிகிள் 15 ரீமேக்
அரசியல் படமான இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். 2019 ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. இதில் ஆயுஷ்மான் குரானா நடித்த லீட் ரோலில் தான் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

ரிலீசுக்கு தயாராகிறது
இந்த படத்தின் டப்பிங் வேலைகள் சமீபத்தில் நடைபெற்றதை அருண்ராஜா காமராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் வெளியிட்டிருந்தார். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளரான போனி கபூர் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

போனி கபூர் வெளியிட்ட அப்டேட்
போனி கபூர் தனது ட்வி்ட்டர் பக்கத்தில், சம உரிமையை பாதுகாப்பதற்கான யுத்தம் துவங்கி விட்டது. இதில் நீங்களும் பங்கேற்க வாருங்கள். நெஞ்சுக்கு நீதி டீசர் நாளை பகல் 12.30 மணிக்கு சினிமா தியேட்டர்கள் மற்றும் ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பை தூண்டும் படம்
உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக போலீஸ் கெட்அப்பில் நடித்துள்ள இந்த படம், அவர் எம்எல்ஏ ஆன பிறகு நடித்து, வெளிவர உள்ள முதல் படம் ஆகும். அதனால் திரைத்துறை மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த படம் பார்க்கப்படுகிறது. அதோடு, உதயநிதியின் தாத்தாவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி எழுதிய சுயசரிதை புத்தகத்தின் டைட்டிலாக நெஞ்சுக்கு நீதி என்ற பெயரையே பேரன் உதயநிதியின் படத்திற்கு டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளதால் பலரின் கவனத்தையும் ஈர்த்து, ஆர்வத்தை தூண்டுவதாக இந்த படம் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











