»   »  தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை 'இவர்' தான்: உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை 'இவர்' தான்: உதயநிதி ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம் சரவணன் இருக்க பயமேன். இந்த படத்தில் ரெஜினா கசான்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே என இரண்டு ஹீரோயின்கள்.

இந்நிலையில் படம் மற்றும் ரெஜினா பற்றி உதயநிதி கூறியதாவது,

ரெஜினா

ரெஜினா

கதைப்படி ரெஜினா எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் நிஜத்தில் அப்படியே நேர் எதிரானவர். எப்பொழுது பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருப்பார்.

சிக்ஸ் பேக்

சிக்ஸ் பேக்

தமிழ் சினிமாவிலேயே எனக்கு தெரிந்து சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா தான். அனைவரும் பிக்னிக் செல்வது போன்று குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டிய படம் சரவணன் இருக்க பயமேன்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ரெஜினா செட்டில் கலகலப்பாக அனைவரிடமும் பேசுவார். அவரிடம் எப்பொழுது பேசினாலும் உடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றி தான் பேசுவார். ஜாலியான பெண் என்றார் உதயநிதி.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட் நடிகைகள் சிக்ஸ் பேக் வைப்பது புதிது அல்ல. பாலிவுட்டில் அனைத்து நடிகைகளுமே ஜிம்மும் கையுமாக தான் உள்ளனர். இது போக கடுமையான உணவு கட்டுப்பாடு வேறு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Udhayanidhi Stalin said his upcoming movie Saravanan Irukka Bayamaen heroine Regina is the only actress in Kollywood who has six pack.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil