»   »  'புஷ்பா புருஷன்' சூரியுடன் புதிய கூட்டணி அமைத்த உதயநிதி!

'புஷ்பா புருஷன்' சூரியுடன் புதிய கூட்டணி அமைத்த உதயநிதி!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படமொன்றை நடித்துத் தயாரிக்கவிருக்கிறார்.

எழில் இயக்கி சமீபத்தில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸிலும் ஹிட்டடித்தது.

Udhayanidhi Stalin Team Up with Soori

குறிப்பாக இப்படத்தில் சூரி, ரோபோ சங்கர் கூட்டணி காமெடியில் கலக்கியிருந்தது. இந்நிலையில் எழிலின் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் எழில் சொன்ன கதை உதயநிதிக்கு பிடித்து விட்டதால் மீண்டும் காமெடிக்கு திரும்ப முடிவெடுத்து, தன்னுடைய சொந்தத் தயாரிப்பிலேயே அப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறாராம்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரனில் புஷ்பா புருஷனாகக் கலக்கிய சூரி இப்படத்தில் காமெடி நடிகராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Udhayanidhi Stalin Team Up with Soori

இதுவரை சந்தானம், கருணாகரன் ஆகியோருடன் காமெடி செய்துவந்த உதயநிதி முதல் முறையாக, இப்படத்தில் சூரியுடன் சேர்ந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor Udhayanidhi Stalin Join Hands with Soori for his Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil