»   »  "கெத்து".. இந்தப் பெயருக்கு வரி விலக்கு கேட்கிறார் உதயநிதி ... கோர்ட்டுக்கும் போவாராம்!

"கெத்து".. இந்தப் பெயருக்கு வரி விலக்கு கேட்கிறார் உதயநிதி ... கோர்ட்டுக்கும் போவாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலினின் கெத்து திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டதால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க உதயநிதி முடிவு செய்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ் மற்றும் விக்ராந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் கெத்து. முதன்முறையாக காமெடியைத் தவிர்த்து ஆக்ஷன் ஹீரோவாக உதயநிதி நடித்திருக்கிறார்.


இந்நிலையில் தணிக்கைக் குழுவில் யூ சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழக வரிவிலக்கு குழுவினர் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.


கெத்து

கெத்து

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ் மற்றும் விக்ராந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான படம் கெத்து. இந்தப் படத்தில் முதன்முறையாக காமெடியைத் தவிர்த்து ஆக்ஷன் ஹீரோவாக உதயநிதி நடித்திருக்கிறார்.தணிக்கையில் இப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்தது.


வரிவிலக்கு

யூ சான்றிதழ் பெற்றாலும் கெத்து என்பது தமிழ்ப்பெயர் இல்லை என்று இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழ்நாடு அரசின் வரிவிலக்கு குழுவினர் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.


6 பேர்

6 பேர் அடங்கிய இக்குழு உறுப்பினர்கள் அளித்த அறிக்கையில் கெத்து என்பது தமிழ்ப்பெயர் கிடையாது என்று கூறி வரிவிலக்கு அளிக்க மறுத்த விவரத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.


தமிழ்ப்பெயர் தான்

இதற்கு பதிலடியாக கெத்து என்பது சுத்தமான தமிழ்ப்பெயர் தான் என்று தமிழ் அகராதியில் இருந்து சில மேற்கோள்களை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக் காட்டியிருக்கிறார்.


வழக்கு தொடர

வழக்கு தொடர

வரிவிலக்கு விவகாரத்தில் வரிவிலக்குக் குழுவினரின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர உதயநிதி தற்போது முடிவு செய்திருக்கிறார். அநேகமாக இன்றே அவர் வழக்கைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதே போல

இதே போல

இதே போன்று விஷால் - பாண்டிராஜ் கூட்டணியில் வெளியான கதகளி படத்திற்கும் வரிவிலக்கு அளிக்க இக்குழுவினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். கதகளி சுத்தமான தமிழ்ப்பெயர் கிடையாது என்பதுதான் வரிவிலக்கு மறுப்பிற்கு காரணமாம்.


தொடரும் பிரச்சினை

தொடரும் பிரச்சினை

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளியான 7 ம் அறிவு திரைப்படத்திற்கு இதேபோல வரிவிலக்கு அளிக்க மறுத்து உதயநிதி வழக்குத் தொடர்ந்திருக்கிறார். தற்போது 2 வது முறையாக அவரின் படத்திற்கு இதேபோல வரிவிலக்கு பிரச்சினை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Government Refusal to Grant Tax Exemption to the film Gethu, now sources said Udhayanidhi Stalin will file a case today against the Committee for Refuse tax Exemption for his Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil